பிரபல நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் ஞாபகமிருக்கா? ஸ்டாலினிடம் மேஜர் கோரிக்கை.. "பெரியவர் ராமானுஜர்"..செம
சென்னை: இந்து மதத்தை காப்பாற்றி, அதை எல்லாருக்கும் போய் சேர வேண்டும் என்று ஆயிரம் வருடங்களுக்கு முன்பேயே பாடுபட்டவர் ஸ்ரீராமானுஜர் என்று பிரபல நடிகர் ஒய்ஜி மகேந்திரன் நெகிழ்ந்து கூறினார்.. அத்துடன், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
HYAGREEVA CINE ARTS பட நிறுவனம் சார்பில் ஸ்ரீ இராமானுஜர் படம் தயாராகி உள்ளது.. கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்து அந்த காலக்கட்டத்திலேயே ஆன்மீகத்தில் சமூக புரட்சி செய்தவர் ராமானுஜர். அவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில், தயாரிப்பாளர் T.கிருஷ்ணன் என்பவரே, இராமானுஜராகவும் நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் ராதாரவி, ஒய்ஜி மகேந்திரன், ஸ்ரீமன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ளது. இப்படத்தின் முதல் பாடல் மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.இதில் நடிகர் ராதாரவி பேசியபோது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து சிலாகித்து பேசியிருந்தார்.
நடிகர் ராதாரவி: அவரை தொடர்ந்து ஒய்ஜி மகேந்திரன் பேசும்போது, "இந்த படத்திலேயே அதிக வயதானவன் நான்தான்.. 300 படங்களில் நடித்திருக்கிறேன்.. 50 வருடமாக நடித்து வருகிறேன்.. ஆனால், இந்த படத்தில் நடித்ததை பெருமையாக கருதுகிறேன்.. இந்த படத்தை பற்றி சொல்லவே ஒரு தகுதி வேண்டும், பாக்கியம் வேண்டும்.. இந்த வாய்ப்பை எனக்கு தந்ததே டைரக்டர் கிருஷ்ணர்தான்.. இன்னொரு விஷயத்தையும் இங்கே சொல்லிடறேன்.. இந்த படத்தில் அவர்தான் ராமானுஜராக நடிக்கிறார்.. அவர் அப்படி நடிக்க மூல காரணமே நான்தான்..
நீங்களே அந்த ரோலை பண்ணிடுங்களேன் என்றேன்.. அதனால், அந்த ரோல் நல்லா இருந்தாலும் நான்தான் பொறுப்பு. நல்லா இல்லை என்றாலும் நான்தான் பொறுப்பு.. இந்த படம் கமர்ஷியலா போகும் என்றெல்லாம் சொல்லவே வேண்டாம்.. இது நம்முடைய நாட்டுக்கு, நமது சமுதாயத்துக்கு, நமது இளைஞர்களுக்கு சொல்லப்பட வேண்டிய ஒரு படம்.. இது புராணம் இல்லை.. இது சரித்திரம்,.. ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்து, சாதனை புரிந்த ஒரு மககானை பற்றி எடுத்திருக்கிற படம்..

சீர்திருத்தம் : அவர் அன்றைய காலம் எவ்வளவு கஷ்டப்பட்டோரோ, அதைவிட அதிகமாக இந்த படத்தை வெளிவர டைரக்டர் கிருஷ்ணன் அதிக கஷ்டப்பட்டுள்ளார்.. நம்ம காலத்தில்தான், அதாவது 60, 70 வருடங்களாகத்தான், சீர்திருத்தம், சமுதாய ஒற்றுமை, பகுத்தறிவு இதெல்லாம் இருப்பதாக நாம நினைத்து கொண்டிருக்கிறோம்.. நமக்கு தெரிந்த காலகட்டம் என்பதால் அப்படி நினைக்கிறோம்.. ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பேயே, மதம் என்பது மதம் பிடிப்பதற்கு கிடையாது என்பதை வலியுறுத்தியவர் ராமானுஜர்.
ஒரு குரு என்பவன் எப்போது முழுமையடைகிறான் தெரியுமா? தனக்கு தெரிந்த எல்லாவற்றையும், பிறருக்கு சொல்லி கொடுக்கும்போதுதான் முழுமையாடைகிறான் என்பதை சொல்லி தந்த முதல்குரு ஸ்ரீராமானுஜர்தான்.. என்னுடைய அம்மா, தன்னுடைய 75 வயதில், பிஎச்டி பண்ணாங்க.. அப்போது அவருடைய சப்ஜெக்ட்டே ராமானுஜர்தான்.. அதனால், நிறைய விஷயங்களை எனக்கு என் அம்மா சொல்லுவார்..
ஒய்ஜி மகேந்திரன்: குலம் - வேறுபாடு, ஏழை - பணக்காரன், ஏற்றம் - இறக்கம் இதெல்லாம் ராமானுஜரிடம் கிடையாது, எல்லாரும் கடவுள் முன்பு சமம் என்ற புரட்சியை ஆயிரம் வருடங்களுக்கு முன்பேயே செய்த பெரியவர்தான் ஸ்ரீராமானுஜர். இவருக்கு பிறகுதான், மற்றவர்கள் சீர்திருத்தங்களை பேசினார்கள்.. கலைஞர் டிவியில்கூட, இவரை பற்றி சீரியலாகவும் எடுத்து வெளியிட்டிருந்தார்கள்.. ராமானுஜர் இந்து மதத்தை எப்படி காப்பாற்றினார் என்பதையும், இந்து மதம் எல்லாருக்கும் போய் சேரணும் என்றும் ராமானுஜர் பாடுபட்டிருக்கிறார்..

இந்தக் கால இளைஞர்களுக்கு இந்தப் படத்தை கொண்டுபோய் சேர்க்க வேண்டிய பொறுப்பு பத்திரிகையாளர்களுக்கு இருக்கிறது. இதுவும் சீர்திருத்த படம்தான். அரசும் இதில் பங்கெடுத்து கொள்ள வேண்டும்.. இந்தப் படத்தை எல்லோரும் பார்க்கும் விதமாக தமிழக அரசும் உதவி செய்ய வேண்டும்.. அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இந்த படம் திரையிட வேண்டும் என்று இந்த நேரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு நான் வேண்டுகோள் வைக்கிறேன்.. மற்ற சீர்திருத்த படங்களை செய்வதைபோலவே, பட்டவர்த்தனமாகவே முதல்வருக்கு இந்த கோரிக்கையை வைக்கிறேன்" என்றார் ஒய் ஜி மகேந்திரன்.
நடிகர் ராதாரவி: ஒய்ஜியை தொடர்ந்து, நடிகர் ராதாரவி பேசவந்தார்.. அப்போது, "முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று ஒய்ஜி மகேந்திரன் சொல்கிறார்.. நீ சொல்லவே தேவையில்லை.. அவங்க அப்பா ஏற்கனவே ராமானுஜரை பற்றி எழுதியிருக்கிறார்.. அதனால், முதல்வரும் இந்த புத்தகத்தை கண்டிப்பாக படிப்பார்.. இந்த படத்தை அவர் பார்த்தால், ராமானுஜராகவே இந்த படத்தில் வாழ்ந்துள்ளவருக்கு பெரிய அவார்டு காத்திருக்கிறது" என்று மகிழ்ச்சி பொங்க வாழ்த்தியிருந்தார் ராதாரவி.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications