பணம் கேட்டு செருப்படி.. பேன்ஸி ஸ்டோர் உரிமையாளர் தற்கொலை முயற்சி.. திமுக உறுப்பினர்கள் மீது சந்தேகம்
Recommended Video

திருவண்ணாமலை: சமீபத்தில் திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடியில் செல்போன் கடை ஊழியர்கள் திமுகவினரால் தாக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி திமுகவில் இருந்து அவர்கள் நீக்கப்பட்டனர்.
செல்போன் பழுது பார்ப்பு தொடர்பான பிரச்சினையில் தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையால் தானிப்பாடியில் தண்டல் பணம் தர தாமதமானதால் பேன்சி ஸ்டோர் உரிமையாளரை சிலர் தாக்கி மற்றும் செருப்பால் அடித்துள்ளனர். இந்த அவமானம் தாங்காமல் உரிமையாளர் விஷம் அருந்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தானிப்பாடியில் பேன்சி ஸ்டோர் உரிமையாளரை தாக்கியது பூபாலன், பவுன்குமார் என்று தெரியவந்துள்ளது. இவர்கள், திமுக அடிப்படை உறுப்பினர்கள் என்று கூறப்படுகிறது.
சேலம் - தானிப்பாடி சாலயில் பேன்சி ஸ்டோர் வைத்துள்ளவர் ராஜேஷ். இவர்தான் பூபாலனிடம் தின தண்டலுக்கு பணம் வாங்கியிருந்தாராம். இந்த நிலையில் தண்டல் பணம் கேட்டு மிரட்டி பேன்சி ஸ்டோர் உரிமையாளர் ராஜேஷை அவதூறு வார்த்தைகளால் திட்டியும், செருப்பால் அடித்தும் பூபாலன் மற்றும் பவுன்குமார் அராஜகம் செய்துள்ளனர்.
இதையடுத்து ராஜேஷ் அவமானம் தாங்க முடியாமல் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தானிப்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தானிப்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications