செங்கல்பட்டில் மகிழ்ச்சி.. ஈசிஆரில் வருது மாற்றம்.. குஷியில் துள்ளும் மாமல்லபுரம்.. சபாஷ் தமிழக அரசு
செங்கல்பட்டு: புத்தம் புது பொலிவாக மாற போகிறது மாமல்லபுரம்.. அம்மக்களின் 50 வருட கனவும் பலிக்க போகிறது.. என்ன நடக்கிறது மகாபலிபுரத்தில்?
சுற்றுலா தலமான மாமல்லபுரம் பஸ் நிலையமானது, தலசயன பெருமாள் கோயில் எதிரே திறந்தவெளியில், குறுகிய இடத்தில் பயணிகளுக்கு தேவையான நிழற்குடை, கழிப்பறை, குடிநீர், உடமைகள் பாதுகாப்பு அறை போன்ற எந்தவிதமான வசதிகளும் இல்லாமல் பல வருடங்களாகவே செயல்பட்டு வருகிறது.

மாமல்லபுரம்: இத்தனைக்கும், உலகப்பாரம்பரிய நகரமாக "யுனஸ்கோ" அங்கீகாரம், சிற்ப புவிசார் நகரம், சர்வதேச 'செஸ் ஒலிம்பியாட்' போட்டி நடந்துள்ள மாமல்லபுரத்தில், போதிய வசதிகள் இல்லாமல் பஸ் நிலையம் செயல்பட்டு வருவது கவலையை தந்து கொண்டிருக்கிறது.
கடந்த மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 1992-ம் ஆண்டு புதிய பஸ் நிலையம் கட்ட திட்டமிடப்பட்டு முடங்கியது... பிறகு, 2010ல் இதற்கான முயற்சி நடந்தும் பிரயோஜனமில்லை..
புதிய பஸ் ஸ்டாண்டு: பிறகு, கருகாத்தம்மன் கோயில் வடபுறம் அரசுக்கு சொந்தமான 6.80 ஏக்கர் நிலத்தில் ரூ.18 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்ட உறுதி செய்யப்பட்டு, 2019-ம் ஆண்டு பணிகள் ஆரம்பமானது. ஆனால், அதற்குள் கொரோனா லாக்டவுன், தேர்தல், திட்ட மதிப்பீட்டில் குளறுபடி போன்ற காரணங்களினால், அதுவும் முடங்கவிட்டது.
இதற்கு பிறகுதான், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் மாமல்லபுரத்தில் ரூ.60 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்ட திட்டமிடப்பட்டது.. "மாமல்லபுரம் பஸ் நிலையம், ரூ.50 கோடியில் அமைக்கப்படும்" என்று அமைச்சர் சேகர்பாபு சட்டசபையிலும் அறிவித்திருந்தார். அதன்படியே, கடந்த 27-ந் தேதி, முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம், புதிய பஸ் ஸ்டாண்டுக்கான அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
கடற்கரை கோவில்: இதனால் மாமல்லபுரம் பகுதி மக்களின் 50 ஆண்டு கால கனவு தற்போது நினைவாகி உள்ளது. 2 மாடி கட்டிடமாக ரூ.90.5 கோடி செலவில் நவீன வசதியுடன் பஸ் ஸ்டாண்டு கட்டப்பட உள்ளது. இது மாமல்லபுரம் கடற்கரை கோவிலை மாதிரியாக கொண்டு வடிவமைப்பட்டு உள்ளது..
தரைத்தளம் ஈசிஆர் புறவழி சாலையுடன் இணைக்கப்பட்டு அதில் 100 கார்கள், 300 மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோ நிறுத்தும் இடமாக திகழ போகிறது.
சிறப்பு வசதிகள்: முதல் தளத்தில், ஈசிஆர் புதிய பாலத்துடன் இணைக்கப்பட்டு சென்னை, புதுச்சேரி, செங்கல்பட்டு உள்ளிட்ட வழித்தட பஸ்கள் 50-க்கும் மேற்பட்டவை நின்று செல்லும் வசதியுடனும் அமைகிறது. மேலும் நேரக்காப்பாளர் அறை, சில்லறை கடைகள், கழிப்பறை, குடிநீர் சுத்திகரிப்பகம், டிக்கெட் கவுண்டர், சுற்றுலாத்துறை அறை, உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்படுகிறது.
2வது தளத்தில் உணவகம், காவல் கட்டுப்பாட்டு அறை, ஓட்டுநர், நடத்துனர் ஓய்வு அறை, பயணிகள் தங்கும் அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அமைகிறது. அந்தவகையில், மாமல்லபுரம் நகரத்திற்கான 100 சதுர கி.மீ., பசுமை மாஸ்டர் பிளான் தயாரிக்கும் பணிகளை அதற்கான நிபுணர்கள் குழுவுடன் அரசு ஆலோசித்து வருகிறது.
ஆர்வம்: எப்படியும் வரும் வருடம் 2025, செப்டம்பர் 25-ந்தேதிக்குள் பணிகளை முடித்து புதிய பஸ் நிலையத்தை திறக்க சி.எம்.டி.ஏ. திட்டமிட்டிருக்கிறதாம்.. அந்தவகையில், வரும் காலங்களில் இந்த பஸ் ஸ்டாண்டு, கிழக்கு கடற்கரை சாலையின் முக்கிய போக்குவரத்து மையமாக அமையும் என்று நம்பப்படுகிறது..!!












Click it and Unblock the Notifications