திருவண்ணாமலை அருகே டீ குடிக்க வந்தவர் வெட்டிக்கொலை.. நிலத்தகராறில் மைத்துனர் வெறிச்செயல்
திருவண்ணாமலை அருகே டீ குடிக்க வந்தவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை: கிளியாப்பட்டு கிராமத்தில் காலையில் கடைக்கு டீ குடிக்க சென்ற விவசாயி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கிளியாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சோலை. இவருக்கும் இவரது மைத்துனருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் சோலை இன்று காலை அப்பகுதியில் உள்ள கடைக்கு டீ குடிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு பதுங்கியிருந்த அவரது மைத்துனர் முருகன் சோலையை தனது நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிக்கொன்றார்.
இதைத்தொடர்ந்து முருகன் மங்கலம் காவல்நிலையத்தில் சரணடைந்தார். மேலும் கொலையில் ஈடுபட்ட முருகனின் நண்பர்கள் கோதண்டம், தேவராஜ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
சோலையின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நிலத்தகாறில் மைத்துனரே வெட்டிக்கொன்ற சம்பவம் கிளியாப்பட்டு கிராமத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications