கர்நாடகத்தின் புதிய அணை: தடுக்க கோரி ஜெ, கருணாநிதியுடன் விவசாயிகள் சங்க தலைவர் சந்திப்பு
சென்னை: மேக தாதுவில் புதிய அணை கட்ட பூமி பூஜை போடப்பட்டுள்ளதை எதிர்த்து போராட்டம் நடத்த ஆதரவு அளிக்க வலியுறுத்தி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதியை விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி. ஆர். பாண்டியன் சந்தித்து பேசினார்.
மேக தாதுவில் புதிய அணை கட்ட பூமி பூஜை போடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த தமிழக விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வலியுறுத்தி, அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் அரசியல் தலைவர்களை சந்தித்து பேசி வருகின்றனர்.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையிலான குழுவினர் சென்னை சிஐடி காலனியில் உள்ள இல்லத்தில் நேற்று மாலை திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார்.

இன்ற காலையில் போயஸ்கார்டனில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பி. ஆர். பாண்டியன் தலைமையிலான குழுவினர் சந்தித்துப் பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கர்நாடக அரசு மேகதூது ஆணை கட்டுவதற்கு மத்திய அரசு துணை போகிறது. இதனை எதிர்த்து விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவளிக்க அனைத்து கட்சி தலைவர்களின் ஆதரவினை நாங்கள் கோரி வருகிறோம். இது குறித்து நல்ல முடிவை விரைவில் கூறுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார் என்று பி. ஆர். பாண்டியன் கூறினார்.
தமிழகத்திற்கு ஒரு சொட்டு காவிரி நீர் கூட தர கூடாது என்று கர்நாடக அரசு திட்டமிட்டு செயல்படுகிறது. ஏற்கனவே, அனுமதியின்றி 7 அணைகளை கர்நாடக அரசு கட்டியது. இப்போது, புதிதாக ராசி மணல், மேக தாது என்னும் இடங்களில் அணை கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டுள்ளது.
நேற்று திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பாமக முதல்வர் வேட்பாளரும், அக்கட்சியின் இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் ஆகியோரை சந்தித்தோம். இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அவர்களின் ஆதரவை கோரும் மனுவினை நாங்கள் அளித்தோம் என்று பி.ஆர். பாண்டியன் கூறினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications