தமிழர்களின் முதுகில் குத்திய மத்திய அரசுக்கு முட்டுக் கொடுக்கும் தமிழக பாஜக!
சென்னை: காவிரி பிரச்சனையில் தமிழர்களின் முதுகில் மத்திய அரசு பகிரங்கமாக முதுகில் குத்திய பின்னரும் தமிழக பாஜகவினர் தொடர்ந்து சப்பை கட்டு கட்டி முட்டுக் கொடுத்து வருவது விவசாயிகளை கொந்தளிக்க வைத்துள்ளது.
தமிழக நலன் சார்ந்த அனைத்து பிரச்சனைகளிலுமே மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழகத்துக்கு பச்சை துரோகம் செய்து வருகிறது. ஆனால் தமிழக பாரதிய ஜனதா கட்சியினரோ மத்திய அரசின் அத்தனை நடவடிக்கையையும் கண்மூடித்தனமாக ஆதரித்து வருகின்றனர்.

கண்டுகொள்ளாத பாஜக
காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மத்திய அரசு இப்படி முதுகில் குத்தியிருப்பது கண்டு கொஞ்சமும் கவலைப்படவில்லை தமிழக பாஜகவினர்.. ஆனால் கர்நாடகா பாஜகவோ தங்களுக்கு சாதகமாக மத்திய அரசை வளைத்திருக்கிறது...

கையாலாகாததனம்
தமிழக பாஜகவினருக்கு பதவிகள்தான் போதும் போல.. தமிழக நலன் நலன் என கூவிக் கொண்டிருப்பதை விட்டு டெல்லிக்குப் போய் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தமிழகத்துக்கு சாதகமான ஒரு நிலையை உருவாக்க முடியாத கையாலாகாத பாஜகவினராகத்தான் உள்ளனர்.

உளறி கொட்டி...
அதனால்தான் மத்திய அரசின் இந்த படுபாதக துரோகத்தை ஆதரிக்கும் வகையில் தொலைக்காட்சி விவாதங்களில் உளறிக் கொட்டி காட்டு கூச்சல் போட்டு வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம்தான் இந்தியாவிலேயே முதல் முதலாக அமைக்கப்படுகிற ஒரு நீர் பங்கீட்டு அமைப்பா? 60 ஆண்டுகளுக்கு மேலாக எத்தனையோ மேலாண்மை வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன...

இப்பதான் எல்லாம்..
மத்திய அரசுக்கு இப்போதுதான் சட்ட சிக்கல் கண்ணுக்கு தெரியுதாம்.. இன உணர்வு பிரச்சனை காதுக்கு கேட்குதாம்... அப்படியே தமிழக பாஜகவினரும் வாந்தி எடுப்பார்களாம்... தமிழர்களும் இதை சகித்துக் கொண்டிருப்பார்களாம்...

சப்பைகட்டு...
இதே நிலைப்பாட்டை கர்நாடகா பாஜகவினர் எடுத்திருந்தால் என்னவாகியிருக்கும் அவர்கள் கதி என்பதை தமிழக பாஜகவினர் உணரவில்லைபோல... அதனால்தான் இத்தனை சப்பைக்கட்டு...!
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications