கருகும் பயிர்கள்... பெண் விவசாயி தற்கொலை - மன்னார்குடி விவசாயி மாரடைப்பில் மரணம்
சாகுபடி செய்த பயிர்கள் கருகியதால் திருச்சி அருகே பெண் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மன்னார்குடி அருகே விவசாயி ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
திருவாரூர் : காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மறுப்பதும், வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதாலும் சாகுபடி செய்த பயிர்கள் கருகி அழிந்தன. இதனால் ஏற்பட்ட கடும் சேதத்தால் மனம் உடைந்த விவசாயிகள் தற்கொலை மற்றும் அதிர்ச்சியால் மரணமடைந்து வருகின்றனர். தமிழகத்தில் பலியான விவசாயிகளின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.
பருவ மழை பொய்த்ததாலும் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா நேரடி விதைப்பு பயிர்கள் கருகி வருகின்றன. கருகிய பயிர்களை பார்த்து மனவேதனையில் தற்கொலை செய்தும், அதிர்ச்சியிலும் விவசாயிகள் உயிரிழக்கின்றனர்.

விவசாயிகள் மரணம்
சில தினங்களுக்கு முன்பு விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டது. அதே நாளில் விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சனிக்கிழமையன்று நேற்று மேலும் 3 விவசாயிகள் மரணமடைந்தனர். இந்த நிலையில் மேலும் 2 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

மாரடைப்பில் மரணம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த கோட்டூர் பள்ளவர்த்தி ஊராட்சி பெரியகுருவாடி கிராமத்தை சேர்ந்தவர் ராமையா பிள்ளை, 70 விவசாயி. இவர் அதே பகுதியில் 7 ஏக்கர் குத்தகை நிலத்தில் சம்பா பயிர் சாகுபடி செய்திருந்தார். வயலுக்கு சென்ற அவர், நீரின்றி பயிர்கள் கருகி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதே இடத்தில் மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து இறந்தார். இறந்த ராமையா பிள்ளைக்கு மனைவி, ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர்.

பெண் விவசாயி தற்கொலை
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த செம்பரை விநாயகபுரத்தை சேர்ந்த ராஜ் மனைவி லட்சுமி,45. இவர் இரண்டரை ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு வாங்கி சம்பா நெல் சாகுபடி செய்திருந்தார். தண்ணீரின்றி பயிர்கள் கருகியது. இதனால் கடந்த சில நாட்களாக லட்சுமி, கவலையில் இருந்து வந்தார். ஞாயிறன்று லட்சுமி, தனது வயலில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். இதுகுறித்து லால்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

39 விவசாயிகள் பலி
டெல்டா மாவட்டத்தில் மட்டுமல்லாது, திருநெல்வேலி, ஈரோடு, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பயிர் கருகிய அதிர்ச்சியில் இறந்த விவசாயிகளின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்த விவசாயிகளுக்கு ரூ.10 லட்சம் வரை நிவாரண உதவி அளிக்க வேண்டும் என்று எதிர்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications