எழும்பூர் ரயில் நிலையத்தில் விவசாயிகள் திடீர் மறியல்... குண்டுகட்டாக தூக்கிச் சென்ற போலீஸ்!
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ராமேஸ்வரம் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்றனர்.
சென்னை : சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ராமேஸ்வரம் ரயிலை மறித்து தண்டவாளத்தில் படுத்து விவசாயிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். தண்டவாளத்தில் படுத்துக் கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர்.
காவிரி டெல்டா விவசாயிகளின் ஜீவாதார பிரச்னையான காவிரி நீர் எந்த தடையுமின்றி கிடைக்க வழி செய்யும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று கடந்த 3 நாட்களாக தமிழகம் முழுவதும் தீவிரமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழக அரசியல் கட்சியினருடன், விவசாய சங்கத்தினரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஒரு பிரிவினரை போலீசார் சாலையிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனிடையே தனித்தனியாக ரயில் நிலையத்திற்குள் சென்ற விவசாயிகள் திடீரென ராமேஸ்வரம் செல்லும் ரயிலை மறித்து தண்டவாளத்தில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் கோஷங்களை எழுப்பினர். விவசாயிகள் திடீரென மறியலில் ஈடுபட்டதை எதிர்பாராத போலீசார் அவசர அவசரமாக போராட்டம் நடத்தியவர்களை நோக்கிச் சென்று அவர்களை தண்டவாளத்தில் இருந்து குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். இதிலும் சிலர் தப்பித்து பக்கத்தில் இருந்த தண்டவாளத்தை ரயிலை முற்றுகையிட முயன்றனர். விவசாயிகளின் ரயில் மறியலால் ராமேஸ்வரம் ரயில் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications