கொந்தளித்த தமிழகம்- மறியல் போராட்டங்களால் ரயில் போக்குவரத்து கடும் பாதிப்பு- லட்சக்கணக்கானோர் கைது!!
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து இன்று விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள் இணைந்து நடத்திய ரயில் மறியல் போராட்டத்தால் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும் உடனே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் தமிழகம் முழுவதும் விவசாயிகள் இன்று முதல் 48 மணி நேர தொடர் ரயில் மறியல் போராட்டத்தில் குதித்துள்ளனர். திமுக, காங்கிரஸ், மக்கள் நலக் கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்து இந்த மறியல் போராட்டத்தில் குதித்துள்ளன.

திமுக பொருளாளர் முக ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், இடதுசாரி தலைவர்கள் ஜி. ராமகிருஷ்ணன், முத்தரசன், நல்லகண்ணு உள்ளிட்டோர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி உள்ளனர். பல இடங்களில் விவசாய சங்கத்தினர் ரயில்வே தண்டவாளங்களில் குடியேறும் போராட்டத்தை நடத்தினர்.
தமிழகம் முழுவதும் 1,00,000க்கும் அதிகமானோர் ரயில் மறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இம்மறியல் போராட்டங்களில் தமிழகத்தில் ரயில் போக்குவரத்து மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பல ரயில்கள் மிகவும் தாமதமாக இயக்கும் நிலை உருவானது. நாளையும் இம்மறியல் போராட்டம் தொடர உள்ளதால் 2வது நாளாக ரயில் சேவை பாதிக்க வாய்ப்புள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications