தொடரும் காவிரி உரிமை போராட்டங்கள்… காய்ந்து போன வாழை மரங்களோடு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருச்சி: காவிரியில் வரும் தண்ணீரை முறையாக திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தி காய்ந்து கருகி போன வாழை மரங்கள், செடி கொடிகளை டிராக்டரில் ஏற்றிக் கொண்டு அரசு அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி நதி நீர் பங்கீட்டில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்துள்ளதை கண்டித்தும், காவிரியில் இருந்து நீரை முறையாக திறந்து விடக் கோரியும், திருச்சியில் உள்ள பொதுப்பணி செயற்பொறியாளர் அலுவலகம், ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட அலுவலகத்திற்கு த.மா.க விவசாயி பிரிவு புலியூர் நாகராஜ் தலைமையில் விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.

அப்போது, காவிரி நதி நீர் பிரச்சனையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும், அனைத்து விவசாய சங்களையும் அழைத்து அவசர கூட்டம் நடத்த வேண்டும். மேலும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து புலியூர் நாகராஜ் கூறியதாவது:
திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள கட்டளை மேட்டுவாய்க்கால் உய்யக்கொண்டான் உள்ளிட்ட 17 கிளைவாய்க்கால்களிலும் கடைமடை வரை தண்ணீர் பாசனத்திற்கு இது வரை கிடைக்கவில்லை. உடனடியாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவேரியில் இருந்து கிளை வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து சில நாட்கள் ஆகியும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் போய் சேரவில்லை. இதனால் ஆழ்கிணறுகள், திறந்தவெளி கிணறுகளில் நீர் ஆதாரம் முற்றிலும் குறைந்து விட்டது. மேற்பகுதியில் தண்ணீர் தேக்கி குடிநீர் வழங்க வேண்டும் என்று நாகராஜ் கூறினார்.
-
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications