தியாகத் தலைவர்களுக்கு பெரிய சல்யூட்...! #FathersDay
சென்னை: இன்று தந்தையர் தினம்.. உலகமெங்கும் அப்பாக்களைப் போற்றிப் புகழ்ந்து கொண்டுள்ளனர் பிள்ளைகள்.
அன்னையர் தினம், மகள்கள் தினம் வரிசையில் இன்று தந்தையர் தினம். இதையொட்டி நமது வாசகர் சண்முகப் பிரியா நமக்கு எழுதி அனுப்பியுள்ள ஒரு குட்டிக் கட்டுரை...

One India நேயர்களுக்கு வணக்கம். இன்று சுமைகளை தாங்கிக்கொண்டு தன் குடும்பத்திற்காக உழைக்கும் ஒவ்வொரு தந்தையர்களுக்கும் என் தந்தையர் தின வாழ்த்துக்கள்.
அப்பா என்ற சொல்லுக்குள் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளது. அவர் தம் பிள்ளைகள் மீது நேரடியாக பாசத்தை காண்பிக்காமல் மறைமுகமாக வைத்திருக்கும் தங்கமான மனம் உள்ளவர். அவர் பட்ட கஷ்டத்தை தம் பிள்ளைகள் படக்கூடாது என்பதில் உறுதியானவர்.
அப்பா தனக்காக என்றும் சம்பாதித்தது இல்லை. தனக்கென்று ஆசை பட்டதும் இல்லை. எதற்காகவும் கலங்காத என் அப்பா என் திருமணத்தின் போது மட்டும் அழுது விட்டார். அவர் கண்கள் கலங்கி நான் பார்த்தது அன்று தான்.
அப்பா என்பதின் அர்த்தம் தியாகத்தின் தலைவன் என்று. அவர் என் வாழ்வின் படிக்கட்டுகள். அவர் கை விரல் பிடித்து தான் இந்த உலகத்தை அறிந்து கொண்டேன். அவர் தான் என் முதல் தலைவன்.
அம்மாக்களின் தியாகம் தனித்துவம் வாய்ந்தது என்றால்.. அப்பாக்களின் அன்பும், வழிகாட்டலும், வார்த்தெடுத்தலும் இன்னொரு விதமான தனித்துவமாகும். யார் பெரியவர் என்பதல்ல இது.. இரு கைகள் இணைந்து எழுப்பும் ஓசை போலத்தான் அப்பாக்களும், அம்மாக்களும்.
புற உலகை பிள்ளைகளக்கு புரிய வைத்து கஷ்ட நஷ்டங்களை சந்தித்து அதில் கரை ஏறுவது எப்படி என்பதை அப்பாக்கள்தான் கற்பிக்கிறார்கள்.. தங்களது நடத்தை மூலம் பிள்ளைகளையும் வழி நடத்துகிறார்கள்.
அப்பாக்களைப் போற்றுவோம்.. அன்போடு வாழ்த்துவோம்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications