சரத்குமார் அணி ஆதரவாளர் பாத்திமா பாபு ஜெயா டிவியிலிருந்து நீக்கம்?
நடிகர் சங்கத் தேர்தலில் எந்த அணிக்கும் ஆதரவாக அதிமுகவைச் சேர்ந்த கலைஞர்கள் செயல்படக் கூடாது என்ற கட்சி தலைமை உத்தரவை மீறி, சரத்குமார் அணிக்கு ஆதரவாக செயல்பட்டதால் நடிகையும் செய்தி வாசிப்பாளருமான பாத்திமா பாபு அதிமுகவிலிருந்தும் ஜெயா டிவியிலிருந்தும் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளகது.
நடிகர் சங்கத் தேர்தல் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது திரையுலகில். இந்தத் தேர்தலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் லேட்டஸ்ட் வரவு பாத்திமா பாபு. அதிமுகவில் இருக்கும் அவர், ஜெயாதொலைக்காட்சியில் செய்திகளும் வாசித்துக்கொண்டிருக்கிறார்.

நடிகர் சங்கத் தேர்தல் வேலைகள் தொடங்கியதும், அதிமுகவைச் சேர்ந்த நடிகர்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப்போடலாம் ஆனால் எந்தஅணிக்கும் சார்பாக இயங்கக் கூடாது என்று தலைமைக் கழகம் உத்தரவிட்டது.
இதைமீறி சரத்குமார் அணியினர் ரஜினியைச் சந்திக்கச் சென்றபோது, அந்தஅணியினருடன் பாத்திமா பாபுவும் சென்றார்.
இதனால் அவர்மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கட்சியிலிருந்தும் ஜெயா தொலைக்காட்சியிலிருந்தும் பாத்திமா பாபு நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது..
ஆனால் பாத்திமா பாபுவிடம் கேட்டபோது, "அது தவறான செய்தி, இந்த வாரத்தில் மட்டும் நான்கு நாட்கள் நான் செய்திவாசித்தேன், கட்சித் தலைமை என்ன சொல்லியிருக்கிறதோ அதன்படி நான் நடந்துகொள்கிறேன் என்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications