ஆர்கே நகரில் ஃபெரா தினகரனின் கைக்கூலிகளாக செயல்படும் போலீசார்.... மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு
ஆர்கே நகரில் பணப்பட்டுவாடாவைத் தடுத்த திமுகவினர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களைச் சந்தித்த திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் காவல்துறையினர் தினகரனின் கைக்கூலிகளாக செயல்படு
சென்னை: ஆர்கே நகரில் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் ஃபெரா தினகரன் அணியினரின் கைகூலிகளாக செயல்படுகின்றனர் என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.
ஆர்கே நகரில் நேற்று இரவு நேதாஜி நகரில் நடந்த பணப்பட்டுவாடாவைத் தடுக்க முயன்ற திமுகவினரை அரிவாளால் வெட்டியுள்ளனர். அவர்களை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவர்களை சந்தித்து நலம் விசாரிக்க திமுக செயல் தலைவர் மு. க ஸ்டாலின் மருத்துவமனைக்கு வந்தார். அப்போது அவர், தினகரன் அணியினரை ஃபெரா அணியினர் என கூறி கடுமையாகச் சாடினார்.

மேலும், இந்த தாக்குதல் குறித்து ஸ்டாலின் கூறியதாவது: எங்கள் இயக்கத் தொண்டர்கள் தாக்கப்படட் செய்தி கிடைத்ததும் நான் காவல்துறை ஆணையர், தேர்தல் ஆணையர், தேர்தல் அதிகாரி ஆகியோரிடம் தொலைபேசியில் புகார் தெரிவித்தேன். நடவடிக்கை எடுக்கிறேன் என்று சொல்கிறார்களே தவிர எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. குறிப்பாக காவல்துறையைச் சேர்ந்தவர்கள் ஃபெரா தினகரன் அணியினருக்கு கைக்கூலிகள் போல செயல்படுகின்றனர்.
எவ்வளவு பணம் கொடுத்தாலும், தினகரனும் ஓபிஎஸ் அணியினரும் டெபாசிட் கூட வாங்க மாட்டார்கள். நிச்சயம் இந்த தேர்தலில் அவர்கள் மண்ணைக் கவ்வுவது உறுதி. அந்த பயத்தில்தான் இவ்வாறான செயல்களில் ஈடுபடுகிறார்கள்'' - இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications