காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்
காவல்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக அரசு காவல் துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்பி, கூடுதலாக காவலர் பணியிடங்களையும் உருவாக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தினசரி செய்தித்தாள்களில் தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, செய்திகள் வராத நாளே இல்லை, மக்களின் உயிர் உடமைகளுக்கு பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள காவல்துறையில் காலி பணியிடங்களை உடனுக்குடன் நிரப்ப வேண்டும். நிர்வாக வரைமுறைப்படி ஒரு காவலர் 505 மக்களுக்கு பாதுகாப்பு பொறுப்பு மேற்கொள்ள வேண்டும். காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், தற்போது ஒரு காவலர் 609 பேருக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும்.

காவலர்களுக்கு பணி சுமை அதிகமாக உள்ளதால் சட்டம்-ஒழுங்கு பணியில் தாமதம் ஏற்படுகிறது, இதை தவிர்க்க வேண்டும். சென்னை மாநகரில் 137 காவல் நிலையங்களும், 63 போக்குவரத்து காவல் நிலையங்களும் உள்ளனர்.
தினசரி 15 முதல் 20 வரையிலான புகார் மனுக்கள் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பெறப்படுகிறது. போதிய எண்ணிக்கையில் காவலர்கள், அதிகாரிகள் இல்லாததால் துரித நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் ஆகிறது. தமிழக மக்கள் தொகை 7,21,47,030. தமிழக காவல் துறையில் காவலர்களின் எண்ணிக்கை 1,35,830.
ஆனால் பணியில் உள்ள காவலர்களின் எண்ணிக்கை 98,500. காலி பணியிடங்கள் 37,330. மக்கள் தொகை ஆண்டு தோறும் அதிகரித்து கொண்டே போகிறது, குற்றங்களும் அதிகரித்து கொண்டே போகிறது. கூலி படையினரின் செயல்பாடுகள் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. தமிழக அரசு காவல் துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்பி, கூடுதலாக காவலர் பணியிடங்களையும் உருவாக்க வேண்டும். இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications