Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேளிக்கை வரிவிலக்கின் பலன் மக்களுக்கே சேரவேண்டும்! - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரிச்சலுகை பெற்ற திரைப்படங்களுக்கு ரசிகர்களிடம் இருந்து வசூலித்த கூடுதல் கட்டணத்தை தமிழக அரசிடம் தியேட்டர் உரிமையாளர்கள் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், வக்கீல் கே.ஜே.சரவணன் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘சென்னையில் உள்ள தியேட்டரில் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 25-ந் தேதி ‘கயல்' என்ற திரைப்படத்தை பார்க்க குடும்பத்தினருடன் சென்றேன். இந்த படத்துக்கு தமிழக அரசு வரிச்சலுகை வழங்கியுள்ளதால், கேளிக்கை வரியை எங்களிடம் வசூலிக்கக் கூடாது. ஆனால், தியேட்டர் உரிமையாளர் கேளிக்கை வரியுடன் சேர்த்து எங்களிடம் வசூலித்துள்ளார். எனவே, எங்களிடம் கூடுதலாக வசூலித்த 107 ரூபாயை, 9 சதவீத வட்டியுடன் திருப்பித்தர உத்தரவிட வேண்டும். வரிச் சலுகை வழங்கும் சட்டத்தை ரத்து செய்யவேண்டும்,' என்று கூறியிருந்தார்.

Film viewers must get tax waiver benefit, says HC

இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

தமிழ் மொழி மற்றும் கலாசார வளர்ச்சிக்காக திரைப்படங்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு வரிச்சலுகை பெறும் திரைப்படங்களில், பிறமொழி வார்த்தைகள், வன்முறை காட்சிகள், ஆபாச காட்சிகள் குறைவாக இருக்கவேண்டும். திரைப்படங்களைப் பார்க்க வரும் ரசிகர்களை மனதில் வைத்தே, இதுபோன்ற வரிச் சலுகைகள் தமிழ் திரைப்படங்களுக்கு வழங்கப்படுகிறது.

திரைப்படங்களை மக்களுக்கு திரையிட்டு காட்டுவது தியேட்டர் உரிமையாளர்களின் கடமையாகும். அந்த கடமையோடு, வரி விலக்கு சலுகை விதிமுறைகளையும் அவர்கள் அமல்படுத்த வேண்டும். வரிச்சலுகை என்பது உரிமை இல்லை. அது ஒரு மானியம் தான். தமிழ்நாடு சினிமா ஒழுங்குமுறை சட்டத்தின்படி, இதுபோன்ற சலுகைகளையும், விதிமுறைகளையும் அரசு பிறப்பிக்க முடியும். எனவே, கேளிக்கை வரிச் சலுகை என்பது திரைப்பட துறைக்கும், தியேட்டர் உரிமையாளர்களின் நலனுக்காக மட்டுமே தவிர, அது ரசிகர்களுக்குக் கிடையாது என்று அரசு தரப்பில் கூறுவதை ஏற்க முடியாது.

திருப்பிக் கொடுங்க

ஒருவரிடம் அதிக வரி வசூலிக்கப்பட்டால், அது திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. எனவே, கூடுதலாக வசூலிக்கப்பட்ட 107 ரூபாயை மனுதாரரிடம் தியேட்டர் நிர்வாகம் திருப்பிக் கொடுக்க வேண்டும். இதேபோல, பிறரிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை, சம்பந்தப்பட்ட நபர்களிடம் திருப்பிக்கொடுக்க முடியாது. எனவே, கூடுதலாக வசூலித்த தொகையை தமிழக வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலாளரிடம் தியேட்டர் உரிமையாளர்கள் ஒப்படைக்க வேண்டும்.

சுற்றறிக்கைக்கு தடை இல்லை.. ஆனால்

வரிச் சலுகை தொடர்பாக வணிக வரித்துறை பிறப்பித்துள்ள சுற்றறிக்கையை ரத்து செய்யவேண்டும் என்றும் வரிச்சலுகை பெற்ற திரைப்படங்களுக்கான டிக்கெட்டுகளில், வரி சலுகை விவரங்கள், டிக்கெட் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை அச்சிட்டு, அதை கேளிக்கை வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற்ற பின்னரே ரசிகர்களுக்கு விநியோகம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், அரசு வெளியிட்டுள்ள அந்த சுற்றறிக்கை சட்டத்தின் அடிப்படையில் தவறானது இல்லை. ஆனால், அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் தெளிவாக இல்லாமல் உள்ளது. எனவே, இந்த சுற்றறிக்கையை ரத்து செய்யவேண்டிய அவசியமில்லை.

சலுகையின் பலன் ரசிகர்களுக்குத்தான்

அதேநேரம், இந்த வரிச்சலுகை ரசிகர்களுக்குத்தான் சென்றடைய வேண்டும். எனவே, கேளிக்கை வரிச்சலுகை திரைப்படங்களை பார்க்க வரும் ரசிகர்களுக்கு சென்றடையும் விதமாக தகுந்த உத்தரவை 4 வாரத்துக்குள் தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை செயலாளர், ஆணையர் ஆகியோர் பிறப்பிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலித்த தியேட்டர் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

-இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

கேளிக்கை வரிச் சலுகையின் பலன் சினிமாக்காரர்களுக்கோ, தியேட்டர்காரர்களுக்கோ இல்லை.. கட்டணம் செலுத்திப் படம் பார்க்கும் ரசிகர்களுக்குத்தான் என்பதை பல ஆண்டுகளாக நாம் கூறி வந்துள்ளோம். இப்போது அதை நீதிமன்றமே உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+