Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்த சிக்கல்.. எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப்பதிவு..சேலம் குற்றப்பிரிவு போலீசார் அதிரடி.. ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 2021ல் தமிழக சட்டசபை தேர்தலில் வேட்புமனுவில் சொத்து விபரங்களை தவறாக குறிப்பிட்டதாக கூறி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது சேலம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2021ல் சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலின்போது போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் தங்களின் சொத்து விபரங்களை வேட்புமனுவுடன் தாக்கல் செய்தனர். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட எடப்பாடி பழனிச்சாமியும் வேட்புமனுவுடன் சொத்து விபரங்களை தாக்கல் செய்தார். இந்த தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றியும் பெற்றார்.

FIR filled against AIADMK General Secretary Edappadi Palanisamy for 2021 election affidavit

இந்நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமி தனது வேட்புமனுவில் சொத்து விபரங்களை மறைத்ததாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த மிலானி என்பவர் சேலம் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், ‛‛2021 சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு பிரமாண பத்திரத்தில் எடப்பாடி பழனிச்சாமி சொத்து விபரங்களை தவறாக குறிப்பிட்டுள்ளார். அதாவது சொத்து விபரங்களை மறைத்துள்ளார். அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவற சட்டசத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவித்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த சேலம் நீதிமன்றம் புகார் குறித்து விசாரித்து, முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது.

மேலும் இதுதொடர்பான விபரங்களை மே மாதம் 26ம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும் சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் தான் சேலம் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என அவர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‛‛மிலானி எடப்பாடி தொகுதியை சேர்ந்தவர் இல்லை. மேலும் அவர் தேர்தலில் போட்டியிடாத நபர். எனது வேட்புமனுவில் தவறான தகவல் ஏதுவும் இல்லை. இதனால் அந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை. மேலும் ஓராண்டுக்கு பிறகு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அதனை கருத்தில் கொள்ளாமல் சேலம் நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. இதனை ரத்து செய்ய வேண்டும்'' என கூறப்பட்டு இருந்தது.

FIR filled against AIADMK General Secretary Edappadi Palanisamy for 2021 election affidavit

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வேட்புமனுவில் தவறான தகவல் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதமன்றத்தில் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்தனர். இந்த வேளையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், இது அவசரகதியில் பதிவு செய்யப்பட்ட வழக்கு என வாதிடப்பட்டது.

இதையடுத்து வாதங்களை கேட்ட நீதிபதி இளந்திரையன், சேலம் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். அதன்பிறகு வழக்கு விசாரணையை ஜூன் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+