ஏற்காடு இடைத் தேர்தல்: தி.மு.க. வேட்பாளர் மாறன் மீது வழக்கு!

சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதிக்கு வருகின்ற டிசம்பர் மாதம் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் வெ.மாறனும், அ.தி.மு.க. சார்பில் மறைந்த எம்.எல்.ஏ. எஸ்.பெருமாளின் மனைவி சரோஜாவும் போட்டியிடுகின்றனர்.
கட்சித் தலைமை தன்னை வேட்பாளராக அறிவித்தது முதல் சேலம் மாவட்டத்தில் உள்ள தி.மு.க.வின் முக்கியப் பிரமுகர்களை, மாறன் நேரில் சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்.
மேலும், நேற்று முன்தினம் அயோத்தியாபட்டினம் ஒன்றியத்தில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். நேற்று 2வது நாளாக வாழப்பாடி பகுதியில் உள்ள கிராமங்களில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
இந்நிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறி அதிகமான வாகனங்களில் சென்றதாக, மாறன் மீது கிராம நிர்வாக அலுவலர்கள் அய்யனார் மற்றும் ராஜேஸ்வரன், வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
கடந்த 22 ஆம் தேதியன்று கட்சித் தொண்டர்களை அழைத்துக் கொண்டு 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் வாழப்பாடியிலிருந்து ஆத்தூர் நோக்கி மாறன் சென்றதாக அந்த புகாரில் அவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து, வாழப்பாடி காவல் ஆய்வாளர் சிவக்குமார், தி.மு.க. வேட்பாளர் மாறன் மீது தேர்தல் நடத்தை விதியை மீறியதாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
பிரச்சாரத்தை தொடங்கிய 2வது நாளே மாறன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருப்பது தி.மு.க.வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications