Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'சின்ன சிவகாசி’ வலங்கைமான்- வைக்கோல் போரில் பதுக்கிய பட்டாசுகள்-நள்ளிரவில் தீ பற்றி வெடித்த விபரீதம்

Subscribe to Oneindia Tamil

வலங்கைமான்: திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் வைக்கோல் போரில் பதுக்கி வைத்த பட்டாசுகள் நள்ளிரவில் தீப்பிடித்து வெடித்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

சின்ன சிவகாசி என்று அழைக்கப்படுகிறது வலங்கைமான். சிவகாசியைப் போலவே இங்கும் பட்டாசு தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. வலங்கைமானில் 12 வெடி உற்பத்தி நிறுவனங்களும் 48 பட்டாசு விற்பனை கடைகளும் செயல்பட்டு வருகின்றன.

Fire Accdient near cracker shop in Valangaiman, Thiruvarur

வலங்கைமானில் பட்டாசு மற்றும் நாட்டு வெடி தயாரிப்பு என்பது குடிசை தொழில் போலவே பல்லாண்டுகளாக நடைபெற்று வருகிறது. வலங்கைமான் தெற்கு அக்ரகாரம், வடக்கு அக்ரகாரம், கீழ் அக்ரகாரம் உள்ளிட்ட இடங்களில் பட்டாசு, நாட்டு வெடிகள் தயாரிக்கப்படுகின்றன. தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, புதுச்சேரி, கடலூர் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பெரும் எண்ணிக்கையில் இங்கு வந்து பட்டாசு, நாட்டு வெடிகளை வாங்கி செல்வதும் வழக்கம்.

வலங்கைமான் குடவாசல் சாலையில் செந்தில் குமார் என்பவர் பட்டாசு கடை வைத்திருக்கிறார். இந்த கடைக்குப் பின்பகுதியில் ஒரு வைக்கோல் போர் அமைக்கப்பட்டிருந்தது. இந்த வைக்கோல் போரில் பெரும் எண்ணிக்கையிலான பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. போலீசார் சோதனைக்கு பயந்து வைக்கோல் போரில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தனர் கடை உரிமையாளர்கள். இந்த வைக்கோல் போரில் பதுக்கி வைக்கப்பட்ட பட்டாசுகளின் மதிப்பு ரூ4 லட்சம் எனவும் கூறப்படுகிறது.

இந்த வைக்கோல்போரில் நள்ளிரவில் திடீரென தீ பிடித்தது. இதனால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளும் சரமாரியாக வெடித்து சிதறின. இதனால் வலங்கைமானில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் உடனடியாக விரைந்து வந்து ஒரு மணிநேரம் கடும் போராட்டத்துக்குப் பினன்ர் தீயை அணைத்தனர். இதனால் அருகே உள்ள பட்டாசு தயாரிப்பு, விற்பனை கடைகளுக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் தாமதித்திருந்தால் வலங்கைமானில் பெரும் துயரம் நிகழ்ந்திருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பொதுமக்கள் கூறுகையில், பட்டாசுகள், வெடிபொருட்கள் பாதுகாப்பு தொடர்பான அரசின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. இதனால் அதிகாரிகளை ஏமாற்ற இப்படியாக பட்டாசுகள், வெடிபொருட்களை பெருமளவில் பதுக்கி வைக்கின்றனர். இதுதான் பெரும் விபத்துகளுக்கு காரணமாகிவிடுகிறது என்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+