விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பலி
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் பணியாளர் ஒருவர் பலியானார்.
Subscribe to Oneindia Tamil
விருதுநகர் : விருதுநகர் அருகே செங்குன்றாபுரம் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் பலி ஆகி உள்ளனர். தீயை அணைக்க தீயணைப்புத்துறையினர் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.
விருதுநகர் அருகே செங்குன்றாபுரம் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் எதிர்பாராத விதமான இன்று மாலை வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் அங்கு இருந்த 20 அறைகள் இடிந்து தரைமட்டமாயின.

பட்டாசு ஆலையின் போர்மேன் பிரபு என்பவர் இந்த விபத்தில் சிக்கி பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், அங்கிருந்த ஊழியர்களை வெளியேற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.வெடிவிபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications