சென்னை பாரிமுனையில் பணபரிமாற்ற மைய கட்டடத்தில் தீ விபத்து
சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள தனியார் பண பரிமாற்ற மைய கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சென்னை: சென்னை பாரிமுனையில் உள்ள பணப்பரிமாற்ற நிறுவனமான தாஸ் இந்தியா அலுவலக கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டடத்தின் 3வது தளத்தில் தீ பற்றி எரிந்ததால் கரும்புகை சூழ்ந்தது.

அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் ஜன்னல் வழியாக கீழே குதித்து தப்பினர். பலர் இரும்பு ஏணிகள் மூலம் வெளியேற்றப்பட்டனர். காலை நேரம் என்பதால் ஊழியர்கள் அலுவலகத்தின் உள்ளே நுழைந்தனர். தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை சூழ்ந்தது ஊழியர்கள் ஜன்னல் வழியாக கீழே குதித்து தப்பினர். தீயணைப்பு ஊழியர்கள் தீவிரமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சம்பவ இடத்தில் கரும்புகை சூழ்ந்துள்ளது. உயிரிழப்பு எதுவும் இல்லை என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். தீ விபத்தில் செல்லாத நோட்டுக்கள் எரிந்து போனதா? சேத மதிப்பு எவ்வளவு என்பது பற்றி தகவல் வெளியாகவில்லை.

கட்டடத்தில் உள்ள ஜெனரேட்டரில் இருந்து தீ பற்றி இருக்கலாம் என முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது. தீ விபத்து ஏற்பட்ட அந்த கட்டடத்தின் அருகே குடியிருப்புகளும், வங்கிகளும் உள்ளதால், அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

கடந்த ஆண்டு பாரிமுனையில் உள்ள எஸ்பிஐ வங்கி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications