சென்னை சில்க்ஸ் கட்டடம்... மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் ஆய்வு
சென்னை சில்க்ஸில் 2-ஆவது நாளாக பற்றி எரியும் தீயை அணைப்பது குறித்து தீயணைப்பு துறை அதிகாரிகளுடன் ஆட்சியர் அன்புச்செல்வன் ஆய்வு செய்தார்.
சென்னை: சென்னை சில்க்ஸ் கட்டடம் இரண்டாவது நாளாக கொழுந்து விட்டு எரிவது குறித்து தீயணைப்பு துறை அதிகாரிகளுடன் ஆட்சியர் அன்புச்செல்வன் இன்று ஆய்வு செய்தார்.
பிரபல துணிக்கடையான தி சென்னை சில்க்ஸில் நேற்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. கட்டடத்துக்குள் இருந்த 15 ஊழியர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

இதில் 60-க்கும் மேற்பட்டதீயணைப்பு வாகனங்களும், 450-க்கும் மேற்பட்ட வீரர்களும் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் இரண்டாவது நாளாக இன்றும் தீ கொழுந்து விட்டு எரிகிறது. இதனை அணைக்க ஹைட்ராலிக் இயந்திரம் கொண்டு தீயை அணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனிடையே கடையின் 4 மாடிகள் நள்ளிரவில் சீட்டு கட்டு போல் சரிந்து விழுந்தன. இதனால் இக்கட்டடம் அபாய நிலையில் உள்ளதால் மற்ற தளங்களையும் மற்றவர்களுக்கு சேதாரம் இல்லாமல் இடிப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆட்சியர் அன்புசெல்வன் ஆய்வு நடத்தி வருகிறார்.
மேலும் தீயை அணைக்க அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications
