குற்றாலத்தில் தீ விபத்து - கடைகள் எரிந்து நாசம் - பல லட்ச ரூபாய் நஷ்டம்
குற்றாலத்தில் கோவில் வாசல் அருகே 5 கடைகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீவிபத்தில் 5 கடைகளில் உள்ள பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாயின.
Recommended Video

குற்றாலம்: குற்றாலத்தில் கோவில் வாசல் அருகே 4 கடைகளில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. தீவிபத்தில் 4 கடைகளில் உள்ள பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாயின. தென்காசி மற்றும் செங்கோட்டை தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
அருவிகளின் நகரம் என்று அழைக்கப்படும் குற்றாலத்தில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை சீசன் காலமாகும். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்யும் போது அருவிகளில் தண்ணீர் ஆர்பரிக்கும். இந்த ஆண்டு சீசன் காலம் முடிந்தும் தண்ணீர் வரத்து அதிகமாகவே இருந்தது.
டிசம்பர் வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இப்போது தண்ணீர் குறைந்து வெறும் பாறைகள் மட்டுமே உள்ளது. எனினும் குற்றாலநாதரை தரிசிக்க மக்கள் வந்து செல்கின்றனர்.

தற்காலிக கடைகள்
குற்றாலம் அருவிக்கரை அருகே தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றாலத்தில் தற்போது சீசன் காலம் இல்லை என்றாலும் சுற்றுலா பயணிகளுக்காக கடைகள் திறக்கப்படுவது வழக்கம். சுவாமி சன்னதி பஜாரில் பல கடைகளில் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

குற்றாலத்தில் தீ விபத்து
இன்று அதிகாலை பூட்டியிருந்த கடைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து தென்காசி மற்றும் செங்கோட்டையில் உள்ள தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்தன.

மூலிகை பொருட்கள் நாசம்
சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர், கடைகளில் பற்றிய தீ முழுவதும் அணைக்கப்பட்டது. தீ விபத்தில் கடைகளில் இருந்த விளையாட்டு பொருட்கள், மூலிகை பொருட்கள் என பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகின.

கடைகள் எரிந்து சாம்பல்
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. சிப்ஸ் போடும் கடைகள், பொம்மைகள் விற்பனை செய்யும் கடைகளுக்கும் தீ பரவியதில் எரிந்து சாம்பலானது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications