மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பயங்கர தீவிபத்து... 50 கடைகள் எரிந்து நாசம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பயங்கர தீவிபத்து நடைபெற்றதால் அங்கிருந்த 50 கடைகள் எரிந்து நாசமாகின.
Recommended Video

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பயங்கர தீவிபத்து நடைபெற்றதால் அங்கிருந்து 50 கடைகள் எரிந்து நாசமாகின. மின் கசிவு காரணமாக தீவிபத்து நடந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இந்த கோயில் வளாகத்தில் ஏராளமான கடைகள் உள்ளன. இங்கு கிழக்கு கோபுர வாசலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே நள்ளிரவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

இதனால் 50 கடைகள் எரிந்து நாசமாகின. சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த தீவிபத்தின் தாக்கத்தால் மாடங்களில் இருந்த புறாக்கள் மடிந்தன. சம்பவம் நடந்த இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மதுரை ஆட்சியர் வீரராகவ ராவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கோயிலில் ஏற்பட்ட தீவிபத்தை காண அதிகாலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதுகுறித்து ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறுகையில் பொதுமக்கள் வழக்கம் போல் தரிசனத்துக்குஅனுமதிக்கப்படுவர். கிழக்கு கோபுர வாசல் மட்டும் ஆய்வுக்குட்படுத்தப்படும் என்றார் அவர்.













Click it and Unblock the Notifications