சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே திடீர் தீ விபத்து
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் தெற்கு ரயில்வே கட்டிடத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
Recommended Video

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அலுவலகத்தில் தீவிபத்து ஏற்பட்டது. 5 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தின் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அலுவலகத்தில் 4வது மாடியில் இன்று காலை சுமார் 9 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயனைப்பு துறையினர் தீயினை கட்டுக்குள் கொண்டுவர முற்பட்டனர், எனினும் தீ பரவியதால் அலுவலகம் புகை மண்டலமாக காட்சியளித்தது.
5 தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். சில மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
நேற்று இரவு குளிர்சாதன பெட்டியை அணைக்காமல் சென்றதால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக விரிவாக விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதே நேரத்தில் அலுவலகத்தில் இருந்த நாற்காலிகள், முக்கிய ஆவணங்கள் தீயில் கருகி விட்டன.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications