பஞ்சு குடோனில் தீவிபத்து.... போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்: வீடியோ
கிருஷ்ணகிரி பழையபேட்டை பஞ்சு குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறை வீரர்கள் தீயை போராடி அணைத்தனர்.
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டையில், பஞ்சு குடோனில் தீவிபத்து ஏற்பட்டதில் பல லட்சம் மதிப்புள்ள பஞ்சு எரிந்து நாசமானது. தீவிபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி பழையபேட்டையில், அப்துல் ரஹீம் என்பவர் தலையணை செய்யும் தொழில் செய்து வருகிறார். அதற்கு அப்பகுதிலேயே பஞ்சு குடோன் ஒன்றும் வைத்துள்ளார். இன்று காலை, பஞ்சு குடோனில் இருந்த இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் தீப்பிடிக்க ஆரம்பித்தது.

குடோனில் பஞ்சு இருந்ததால் தீப்பற்றி மளமளவென எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்கு உடனே தகவல் கூறினர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பலமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் அங்கு வேலை பார்த்த யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. இந்த தீவிபத்தை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications