தஞ்சை குடோன், சிவகாசி காகித ஆலையில் தீ விபத்து - பல லட்சம் பொருட்கள் சேதம்
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே குடேனில் தீ விபத்து ஏற்பட்டது. இதேபோல சிவகாசி காகித ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர் : தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே ரப்பர் குடோனில் இன்று காலையில் நிகழ்ந்த தீ விபத்தில் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
10 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். விபத்து ஏற்பட்ட பகுதி குறுகிய சந்து என்பதால் சம்பவ இடத்திற்கு செல்ல கடுமையாக போராடினர். கடும் சிரமத்திற்கு இடையே தீயை அணைத்தனர்.

தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, வீடுகளில் இருந்து கேஸ் சிலிண்டர்கள் அகற்றப்பட்டது.
இதே போல விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அணைகுட்டம் கிராமத்தில் தனியார் காகித ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications