காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை மின்சார ரயிலில் திடீர் தீ - பயணிகள் பதட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: காஞ்சிபுரத்திலிருந்து சென்னை நோக்கி வந்த தினசரி ரயிலில் தீப்பிடித்த காரணத்தினால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை புறநகர் மின்சார ரயில் பாலூரை நெருங்கும் போது பயணிகள் பெட்டியில் தீப்பிடித்தது.

இதனால் உடனே ரயில் நிறுத்தப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு படையினர் ரயில் பெட்டியில் பிடித்த தீயை அணைத்தனர். தீ அணைக்கப்பட்ட பின் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
இத்திடீர் தீவிபத்தினால் பயணிகள் பெரிதும் அச்சமடைந்தனர். எனினும், இவ்விபத்தினால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. சேதங்களும் பெருமளவில் இல்லை என்று ரயில்வே ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications