வந்துவிட்டது டிசம்பர் பூதம்.. இந்த வருடத்தின் முதல் புயல்.. ஓகி என்ன செய்யும்? #CycloneOckhi
கன்னியாகுமரிக்கு தெற்கே 60 கி.மீ தொலைவில் ஓகி புயல் மையம் கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.
Recommended Video

சென்னை: இந்த வருடத்தின் முதல் புயலாக உருவாகி இருக்கிறது ஓகி புயல். இந்த புயல் என்ன செய்யும், எந்த பகுதிகளை பாதிக்கும் என்றெல்லாம் கணிக்கப்பட்டு இருக்கிறது.
உலகின் பல முக்கிய வானிலை ஆராய்ச்சி மையங்கள் இந்த புயல் குறித்த கணிப்பை வெளியிட்டு இருக்கிறது. தற்போது கன்னியாகுமரிக்கு மிக அருகில் இந்த புயல் மையம் கொண்டு உள்ளது.
இது எப்போது வேண்டுமானாலும் வலுவடையலாம் என்று கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த புயல் எந்த இடத்தில் கரையை கடக்கும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

வருடத்தின் முதல் புயல்
இந்த வருட மழை காலத்தின் முதல் புயல் என்ற சிறப்பு பெயரை பெற்று இருக்கிறது ஓகி புயல். தற்போது இந்த புயல் கன்னியாகுமரிக்கும், திருவந்தபுரத்திற்கும் இடையில் இருக்கிறது. இந்த புயல் நொடிக்கு நொடி வலுவடைந்து கொண்டே செல்வதாக கூறப்படுகிறது. இன்று காலையில் இருந்து காற்றின் வேகம் இலங்கையிலும், கன்னியாகுமரியில் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

எங்கு இருக்கிறது
இந்த புயல் சின்னம் உருவான போது சரியாக கன்னியாகுமரியில் இருந்து 170 கிலோ மீட்டர் தூரத்திலும் இலங்கையில் இருந்து 240 கிலோ மீட்டர் தூரத்திலும் இருந்தது. தற்போது அந்த புயல் கொஞ்சம் கொஞ்சமாக கன்னியாகுமரிக்கு அருகில் வந்துள்ளது. இதன்காரணமாக தற்போது சரியாக கன்னியாகுமரிக்கு தெற்கே 60 கி.மீ தொலைவில் ஓகி புயல் மையம் கொண்டு இருக்கிறது.

ஓகி புயல் என்ன செய்யும்
தற்போது இந்த ஓகி புயல் கொஞ்சம் கொஞ்சமாக வலுவாக்கிக் கொண்டே வருகிறது. இப்போதே 160கிமீ வேகத்தில் அங்கு காற்று வீச ஆரம்பித்துவிட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில் 200கிமீ வரை காற்றின் வேகம் அதிகரிக்கும். மேலும் இது அரபிக்கடலை நோக்கி சென்று தமிழ்நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. ஆழ்ந்த கடல் பகுதி என்பதால் இதன் திசையை கணிப்பது கடினம் ஆகியுள்ளது.

பாதிப்பு எங்கு
இந்த புயல் காரணமாக தென் தமிழக மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்ட வாய்ப்பு உள்ளது. கடலூர், ராமேஷ்வரம், கன்னியாகுமரி, ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி, தொண்டி, நாகர்கோவில், கோவில்பட்டி, பாம்பன், திருவனந்தபுரம், ஆலப்புழா, கொல்லம், கொச்சி போன்ற பகுதிகள் இதனால் அதிகம் பாதிப்படையும். சென்னையிலும் இதன் காரணமாக அதிகமாக மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications