சாலையில் கொட்டிய அமிலம்: செங்கோட்டை அரிஹரா ஆற்றில் கலந்ததால் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்
நெல்லை: லாரியிலிருந்து சாலையில் கொட்டி ஆசிட் செங்கோட்டை அரிஹரா ஆற்றில் கலந்ததால் மீன்கள் செத்து மிதந்தன. இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியை அடுத்த ஆறுமுகநேரி இ.சி.டபுள்யு நிறுவனத்தில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு 20 ஆயிரம் லிட்டர் ஹைட்ரோ குளோரின் ஆசிட் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று சென்றுகொண்டிருந்தது. லாரியை ஆறுமுகநேரியைச் சேர்ந்த சங்கர் என்பவர் ஓட்டிச் சென்றார்.
செங்கோட்டை வாஞ்சிநாதன் சிலை அருகே வரும்போது லாரியின் இரண்டு பகுதிகளில் இருந்து கசிவு ஏற்பட்டது. இதையடுத்து ஆசிட் சாலையில் கொட்டி ஆறாக ஓடியது. அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் உடனடியாக டிரைவருக்கு தெரியபடுத்த அவர் உடனடியாக லாரியை சாலை ஓரத்தில் நிறுத்தினார். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினரும், போலீசாரும் விரைந்து வந்து லாரி ஓட்டுனரிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் "ஹைட்ரோ குளோரின்" ஆசிட் அருகில் மக்கள் பயன்படுத்தும் அரிஹரா நதியில் கலந்ததால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து லாரியை அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினர் அதிகாரிகள். பின்னர் இரவு மாற்று வாகனம் கொண்டுவரப்பட்டு லாரியில் இருந்த ஆசிட் மாற்றப்பட்டது.

இதில் அதிகளவு ஆசிட் தரையில் கொட்டி அருகிலுள்ள ஆற்றில் கலந்தது. இதன் காரணமாக ஆற்று நீரில் ஆசிட் கலந்ததின் விளைவாக மீன்கள் செத்து மிதக்கத் தொடங்கியது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மதுரை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி மனோகரன், நெல்லை மாவட்ட அதிகாரி கிருபானந்த ராஜா மற்றும் செங்கோட்டை தாசில்தார் செல்வ நாயகம் மற்றும் அதிகாரிகள் குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு நடத்தினர். மீன்கள் உயிரிழந்து கிடப்பதை பார்வையிட்டனர்.
பின்னர் சோதனைக்காக தண்ணீரின் மாதிரிகளை கேன்களில் எடுத்து சென்றனர். விவசாயிகள் கார் சாகுபடியை தொடங்க உள்ள நிலையில் ஆற்று நீரில் அமிலம் கலந்ததால் அதை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications