Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே நபருடன் தாயும் மகளும் கள்ள உறவு.. கடைசியில் பறிபோனது மகளின் உயிர்.. கள்ளக்காதலன் சிறையில்!

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூர் அருகே மீனவர் ஒருவருடன் தாயும், மகளும் கள்ளக்காதலில் திளைத்தனர். ஆனால் இருவரிடமும் தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்து விட்டார் அந்தக் கள்ளக்காதலன். கடைசியில் மகளுடன் ஏற்ப்டட தகராறில் 15 வயதேயான அந்த சிறுமியைக் கொலை செய்து விட்டார். தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

தனது கள்ளக்காதலன் மகளையும் காதலிப்பதை அறிந்த அந்தத் தாயார் அதை முளையிலேயே கிள்ளி எறிய முயலவில்லை. மாறாக, அதை ஆதரித்துள்ளார், ஊக்குவித்துள்ளார், மகளையும், அவ்வப்போது அந்த கள்ளக் காமுகனிடம் அனுப்பி வைத்துள்ளார். நடந்த இது எதுவுமே தெரியாமல் இருந்துள்ளார் சிறுமியின் தந்தை.

இப்போது 15 வயது சிறுமியின் உயிர் போய் விட்டது. கள்ளக்காதலன் சிறைக்குப் போய் விட்டார். தலையில் அடித்துக் கொண்டு அழுது கொண்டிருக்கிறார் சிறுமியின் தந்தை.

கிள்ளை...

கடலூர் மாவட்டம் கிள்ளை அருகே கடந்த 10ம் தேதி 15 வயது சிறுமியின் உடல் அழுகிய நிலையில் நிர்வாண கோலத்தில் கிடந்தது.

பையில் சீருடை.. பளளிப் புத்தகங்கள்

அந்த சிறுமியின் முகம் கோரமாகிக் கிடந்தது. உடல் அழுகி சிதைந்து போயிருந்தது. இதனால் முகத்தை அடையாளம் காண முடியவில்லை. அவள் வைத்திருந்த பையில் சீருடையும், சாதாரண சுடிதாரும், புத்தகங்களும் இருந்தன.

தென்னலக்குடி மாணவி

இதையடுத்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர் போலீஸார். இதில் இந்த சிறுமி தென்னலக்குடி கிராமத்தைச் சேர்ந்த திருக்கார்த்திகேயன் என்பவரது மகள் கெளசல்யா என்று தெரிய வந்தது. 10ம் வகுப்பு படித்து வந்தவர் கெளசல்யா.

தாய், மகளை சீரழித்த அன்புதாஸ்

போலீஸார் தொடர்ந்து விசாரணையை துரிதப்படுத்தியபோது அதில் ஜான் விஜய் என்கிற அன்புதாஸ் சிக்கினார். இவர் மீனவர் ஆவார். கொத்தனார் வேலையிலும் ஈடுபட்டு வருகிறார். இவர்தான் கெளசல்யாவைக் கொலை செய்தது என்பது உறுதியானது. இதையடுத்து அன்புதாஸ் கைது செய்யப்பட்டார். கெளசல்யாவுடன் மட்டுமல்லாமல், அவரது தாயார் பழனியம்மாளுடனும் தொடர்பு வைத்துள்ளார் அன்புதாஸ் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

அடிக்கடி வீட்டுக்கு வந்து

பழனியம்மாளைப் பார்க்க அடிக்கடி அவரது வீட்டுக்கே வருவாராம் அன்புதாஸ். திருக்கார்த்திகேயன் இல்லாத சமயத்தில் வருவது வழக்கம். அப்போது கெளசல்யாவுடனும அவருக்கு நட்பு ஏற்பட்டது. இதை பழனியம்மாளும் அனுமதித்துள்ளார். மூவரும் இணக்கமாக பழக ஆரம்பித்துள்ளனர்.

பைக் பயணம்

இதையடுத்து பழனியம்மாளின் ஒத்துழைப்புடன் கெளசல்யாவை பல இடங்களுக்கும் கூட்டிப் போயுள்ளார் அன்புதாஸ். அப்படித்தான் கடைசியாகவும் தாயாரே மகளை, அன்புதாஸுடன் வழியனுப்பி வைத்துள்ளார். ஆனால் கெளசல்யாவின் பிணம்தான் கடைசியில் மிஞ்சியது.

அம்மாவுடன் எப்படிப் பழக்கம்

போலீஸாரிடம் அன்புதாஸ் கொடுத்த வாக்குமூலத்தில், எனக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தையும் உள்ளது. மீன்பிடித் தொழில் மட்டுமில்லாமல் கொத்தனார் வேலையும் செய்து வருகிறேன். அப்போதுதான், கௌசல்யாவின் அம்மாவுடன் பழக்கம் ஏற்பட்டது.

கெளசல்யாவும்

கௌசல்யாவும் என்கூட பழகினாள். அது காதலாக மாறியது. திருமணம் செய்வதாகக் கூறித்தான் கௌசல்யாவை கிள்ளை பகுதிக்கு அழைத்துச் சென்றேன். போகும் வழியில்தான் எனக்குத் திருமணமானதைச் சொன்னேன். அதற்கு அவள், பரவாயில்லை... இனிமேல் நீ என்னோடுதான் இருக்க வேண்டும் என்று வாக்குவாதம் செய்தாள். கோபத்தில் வாய்க்காலில் கிடந்தக் கட்டையை எடுத்து கௌசல்யாவின் தலையில் அடித்தேன். கௌசல்யா மயங்கி கீழே விழுந்துவிட்டாள். பிறகு கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன் என்று கூறியுள்ளாராம் அன்புதாஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+