கூடங்குளத்திற்கு எதிராக அக். 18ல் பிரமாண்ட பேரணி- ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி: கூடங்குளம் அணுஉலையை நிரத்தரமாக மூடக்கோரி அக்டோபர் மாதம் 18ம் தேதி தூத்துக்குடியில் பேரணியுடன் கூடிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மீனவ ஐக்கிய முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் மைக்கேல் தூத்துக்குடியில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தென்தமிழகத்தை சுடுகாடாக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்தினை உடனடியாக மூடவேண்டும், நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்ட கடற்கரைகளில் நடந்துவரும் கார்னட் மணல்கொள்ளைக்கு நிரத்தரமாக தடை விதிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி அக்டோபர் மாதம் 18ம் தேதி பேரணியுடன் கூடிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை முன்பிருந்து துவங்கும் பேரணி தூத்துக்குடி ரோச் விக்டோரியா சிலை முன்பு நிறைவடைகிறது. அதன்பின்னர் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் சேர்த்து 34 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பார்கள்.
மணல்கொள்ளையால் ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து அறிந்த தமிழக முதல்வர் அதனை ஆய்வு செய்திட குழு ஒன்று அமைத்தார். அந்த குழு ஒரு மாத காலத்தில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று கூறியிருந்தார். இந்த குழுவின் நிலை குறித்து தமிழக முதல்வர் தெரியப்படுத்தவேண்டும் என்றார்.
பேட்டியின் போது மீனவ ஐக்கிய முன்னணியின் இணைப்பொதுச்செயலாளர் மங்கையர்செல்வன், தூத்துக்குடி மாவட்ட தலைவர் சேவியர்வாஸ், செயலாளர் சுபாஷ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications