திருச்செந்தூர் அருகே கடலில் மிதந்து வந்த மர்ம பொருளால் பரபரப்பு!
திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டத்தில், திருச்செந்தூர் அருகே மர்ம பொருள் கடலில் மிதந்து வந்ததால் அதை எடுத்து மரைன் போலீசிடம் மீனவர்கள் ஓப்படைத்தனர். அதனை கடலோர காவல் படையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஆலந்தலை அருகே கடலில் சுமார் 5 மைல் தொலைவில் சில மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது கடலில் மஞ்சள் நிறத்தில் வாக்கி டாக்கி போன்ற கருவி மிதந்துள்ளது. அதை கண்ட அவர்கள் அதனை மீ்ட்டு ஆலந்தலை மரைன் போலீசிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அந்த கருவி கப்பல்களில் பயன்படுத்தப்படும் எமர்ஜென்சி கருவி போல் இருந்ததால் அதை கடலோர காவல் படையினரிடம் ஓப்படைத்தனர்.

இதற்கிடையே கடலில் மிதந்த அந்த கருவியில் இருந்த ஒரு சிக்னல் கடலோர காவல் படை கப்பலில் உள்ள ரேடாரில் கிடைத்துள்ளது. இதனால் இரண்டு கடலோர காவல் படை ரோந்து படகுகள் மற்றும் கடலோர காவல் படையின் டோனியர் ரக விமானம் மூலம் ஆலந்தலை முழுவதும் அவர்கள் தேடியுள்ளனர்.
அவர்களுக்கு மரைன் போலீஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த கருவியை அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வில் அது கப்பல் ஆபத்து காலத்தில் பயன்படுத்தப்படும் இப்ரிப் எனப்படும் சிக்னல் அனுப்பும் கருவி என்று கண்டறியப்பட்டது. இது எந்த படகு மற்றும் கப்பலில் இருந்து விழுந்தது என்பது அதில் பதிவாகி இருக்கும் ஐஎம்ஓ, எம்எம்எஸ்ஐ ஆகிய கப்பல் பதிவு நம்பர்களை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது கப்பல் கடலில் மூழ்கும் போது தண்ணீரில் விழுந்ததும் தானாக சிக்னல் கொடுக்க தொடங்கும். இதில் ஜிபிஎஸ் வசதி இருப்பதால் விபத்து கப்பல் எந்த இடத்தில் எந்த திசையில் இருக்கிறது என்பதை துல்லியாக கணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications