இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்கக் கோரி மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
சென்னை: இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிடுக்கக் கோரி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. நாகப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து படகு ஒன்றில் 9 மீனவர்களும், ராமநாதபுரம் மாவட்டம் மீன்பிடி தளத்தில் இருந்து படகு ஒன்றில் 4 மீனவர்களும் 2ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் அனைவரும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, காங்கேசன் துறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது இலங்கை சிறைகளில் உள்ள 48 தமிழக மீனவர்கள், 122 மீன்பிடி படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமாக படகுகள் சேதமடையாமல் மீட்க, இலங்கை உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஏழை மீனவர்களின் வாழ்க்கையை, வாழ்வாதாரத்தை காக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமி ஆட்சியை நான்தான் காப்பாற்றிக் கொடுத்தேன்! எனக்கே சீட் இல்லை! தனபால் குமுறல் -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்!












Click it and Unblock the Notifications