நாகை மீனவர்கள் குஷி.. முடிகிறது மீன்பிடி தடைகாலம்.. இன்று நள்ளிரவு கடலுக்கு செல்ல ஆயத்தம்
தடைகாலம் முடிந்து மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்கு நள்ளிரவு செல்கிறார்கள்.
நாகை: நாகையில் மீன்பிடி தடைகாலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் இன்று நள்ளிரவே மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க தயாராகி வருகின்றனர்.
மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ம்தேதி முதல் ஜூன் 14ம்தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகு மீனவர்களும், பைபர் படகு மீனவர்களும் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் சுமார் ஒரு லட்சம் மீனவர்கள் இந்த தடைக்காலமான 60 நாட்களுக்கு கடலில் இறங்கி மீன்பிடிக்க செல்லவில்லை.

இதனால் அவர்கள் வேலையின்றி, வருமானமின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனாலும் அந்நாட்களில் தங்கள் படகுகளின் பழுது நீக்கல், மீன்பிடி வலைகளை தைப்பது, உலர்த்துவது உள்ளிட்ட பணிகளை செய்து வந்தனர். மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை என்பதால் மீன்களின் விலையும் பலமடங்கு உயர்ந்து காணப்பட்டது. இதில் மீன்பிரியர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் மாவட்டத்தின் மீன்பிடி தடை காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் இன்று நள்ளிரவே மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல உள்ளதால் குஷியாகி உள்ளனர். அதற்காக மீன்பிடி வலைகள், மீன்பிடி சாதனங்கள், கடலில் தங்கி மீன்பிடிக்க தேவையான டீசல், மீன்களை பதப்படுத்துவதற்கு தேவையான ஐஸ் கட்டிகள் என அனைத்தையும் தங்களது படகுகளில் நிரப்பி வருகின்றனர்.
மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதால், இன்னும் ஓரிரு நாட்களில் தமிழக கடலோர மீன் மார்கெட்டுகளில் மீன்கள் வந்து குவிய உள்ளதால் மீன் பிரியர்கள் உற்சாகமாகமாகி உள்ளனர். அதேபோல, தற்போது அதிக விலையில் விற்கப்பட்டு வரும் மீன்களின் விலையும் இனி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications