மு.க. அழகிரி ஆதரவாளர்கள் மேலும் 5 பேர் சஸ்பென்ட்
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் மேலும் 5 பேரை திமுக தலைமை சஸ்பென்ட் செய்துள்ளது.
மதுரையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை விமர்சிக்கும் வகையில் போஸ்டர் ஒட்டியதால் ஒட்டுமொத்த மதுரை மாநகர் மாவட்ட திமுக அமைப்புகளே கலைக்கப்பட்டது. பின்னர் மதுரை மாநகர் மாவட்ட திமுகவுக்கு பொறுப்புக் குழு நியமிக்கப்பட்டது.
அத்துடன் மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் 5 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்தும் மு.க. அழகிரி ஆதரவாளர்கள் அவ்வப்போது திமுக தலைமையை உசுப்பிவிடும் வகையில் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை புறநகர் மாவட்ட செயலர் மூர்த்தி மீது கொட்டாம்பட்டி ஒன்றிய திமுக ஆதிதிராவிட அணி துணை அமைப்பாளர் முத்துவேல் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். போஸ்டர் ஒட்டியபோது தம்மை மூர்த்தி ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து மூர்த்தி மீது தீண்டாமை பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து கொட்டம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் அசோக்குமார், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் வெள்ளையன், கொட்டாம்பட்டி ஒன்றிய ஆதிதிராவிட அணி துணை அமைப்பாளர் முத்துவேல், மாவட்ட துணை செயலாளர் எம்.எல்.ராஜ் ஆகியோர் சஸ்பென்ட் செய்யப்பட்டிருப்பதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.
அடுத்தடுத்து மு.க. அழகிரி ஆதரவாளர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டு வருவது மதுரை திமுகவினருக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications