For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"மந்திரி தந்திரி" கட்டுரை.... ஆனந்த விகடன் மீது 5 தமிழக அமைச்சர்கள் சார்பில் புதிய அவதூறு வழக்கு

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ஆனந்த விகடன் வார இதழுக்கு எதிராக தமிழக அமைச்சர்கள் வைத்திலிங்கம், கே.சி.வீரமணி, எம்.எஸ்.எம். ஆனந்தன், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் ஆகியோர் இன்று புதிய அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர்.

விகடன் குழுமத்தின் ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் வாரம் இரு முறை இதழ்கள் மீது முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் ஏற்கனவே பல அவதூறு வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர். அண்மையில் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலம் குறித்த கட்டுரைக்காக ஆனந்த விகடன் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

Five TN Ministers sue Ananda Vikatan magazine for defamatory article

அதை வெளியிட்டதற்காக முரசொலி ஆசிரியரான திமுக தலைவர் கருணாநிதி மீதும் அவதூறு வழக்கு போடப்பட்டது. இவ்வழக்கில் கருணாநிதி நீதிமன்றத்திலும் ஆஜராகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் அமைச்சர்கள் வைத்திலிங்கம், கே.சி.வீரமணி, எம்.எஸ்.எம். ஆனந்தன், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் ஆகியோர் சார்பில் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஒரு அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அம் மனுவில், ஆனந்த விகடனில் "மந்திரி தந்திரி" பகுதியில் அமைச்சர்கள் பற்றி கூறியுள்ள தகவல்கள் உண்மைக்கு மாறானது. தமிழக அரசுக்கு அவப் பெயரை உண்டாக்கும் விதமாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த செய்தியை வெளியிட்ட ஆசிரியர் கண்ணன், பதிப்பாளர் மாதவன் ஆகியோரை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Five Tamil Nadu Ministers filed a defamation case against Ananda Vikatan magazine for Mantri-Tantri article.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X