காதலிக்க மறுத்த மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வாலிபருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை
திண்டுக்கல்: காதலிக்க மறுத்த மாணவியைத் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் வாலிபர் ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனி விதித்து திண்டுக்கல் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் என்.எஸ்.நகர் அபிராமி நகரை சேர்ந்த ராஜாங்கம் மகள் புவனேஸ்வரி (16), அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்தார். புவனேஸ்வரியை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார் திண்டுக்கல் நரிப்பாறையை சேர்ந்த பாண்டி என்ற வெல்டிங் பாண்டி (25).
பாண்டியின் காதலை புவனேஸ்வரி நிராகரித்தப் போதும், அவரது பெற்றோரைச் சந்தித்து, புவனேஸ்வரியைத் திருமணம் செய்து வைக்கும்படி மிரட்டியுள்ளார் பாண்டி. தொடர்ந்து பாண்டி கொடுத்து வந்த மன உளைச்சல்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் கஷ்டப்பட்ட புவனேஸ்வர், கடந்த 2010ம் ஆண்டு, டிசம்பர் 17ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
புவனேஸ்வரியின் மரணம் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து வெல்டிங் பாண்டியைக் கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்ந்லையில், காதலிக்க மறுத்த மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக பாண்டிக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப் பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications