வெளிநாட்டிலும் கருப்பு கொடி காட்டுனா அடிச்சு நொறுக்கிவீங்களா ராமதாஸ்? ரஜினி ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

டாக்டர் ராமதாஸ் அவர்களே, மதுரையில் என் ரசிகர்கள் உங்களுக்கு கறுப்புக் கொடி காட்டியதற்காக அவர்களை நொறுக்கி விட்டீர்கள். நாளை வருங்காலத்தில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மும்பை, டில்லி, கோல்கட்டா, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, லண்டன், கனடா, பாரீஸ் ஏன் ஜப்பானில் நீங்கள் சென்றால் கூட அங்கும் என் ரசிகர்கள் கறுப்புக் கொடி காட்டுவார்கள். என்ன செய்வீர்கள்?

அங்கேயும் அடியாட்களை கூட்டிக்கிட்டு போய் அவங்களையெல்லாம் அடிச்சு நொறுக்குவீர்களா? வேண்டாம் இந்த வெறிச் செயல்கள்.

டாக்டர் ராமதாஸ் அவர்களே என்னுடைய நண்பர்கள் வீட்டில் தஞ்சம் அடைந்து விட்டீர்கள். இதற்கு மேல் உங்களைப் பற்றி கூற என் மனம் இடம் கொடுக்கவில்லை.

Flash Back: Rajini's last election voice

இப்பொழுது முக்கியமான கட்டத்திற்கு வருகிறேன். ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும்பொழுது அது பாராளுமன்றத் தேர்தலாகட்டும் அல்லது சட்டமன்றத் தேர்தலாகட்டும் என்னுடைய ஆதரவு யாருக்கு அதாவது என்னுடைய வாய்ஸ் யாருக்கு என்ற கேள்வி எழுகிறது. இந்த முறையும் அந்த கேள்வி எழுந்துள்ளது.

நான் தெளிவாக சொல்ல விரும்புகிறேன். பல காரணங்களுக்காக இந்த பாராளுமன்றத் தேர்தலில் என்னுடைய ஆதரவு யாருக்கும் இல்லை. ஆனாலும், நான் ஒன்றை மட்டும் சொல்லியாக வேண்டும். என் அன்பார்ந்த தமிழ் மக்களே, இப்பொழுது நம் நாட்டிலேயே தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கும் பிரச்னை தண்ணீர் பிரச்னை. ஏழைகளிலிருந்து, பணக்காரர்களிலிருந்து, மிருகங்கள், பறவைகளிலிருந்து இப்பொழுது அனைவரும் தவித்துக் கொண்டிருப்பது தண்ணீருக்காக.

நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இந்திய நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்தால்தான் இந்த கடுமையான பிரச்னை தீரும். நம் நாட்டிலுள்ள தண்ணீர் பஞ்சத்தை நீக்க இந்த ஒரே வழிதான். குறிப்பாக, நம் நாட்டு நதிகளை இணைக்காவிட்டால் ரொம்ப பாதிக்கப்படப் போவது தமிழ்நாடுதான். ஏனென்றால், நம்மைச்சுற்றி உள்ள மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகாவிலெல்லாம் பல ஜீவநதிகள் உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் தண்ணீர் சுமந்து வரும் எந்த ஜீவநதியும் இல்லை.

நம் நாட்டு நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்தினால் இதற்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்கிறேன் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இது அனைவரும் அறிந்த விஷயமே. மத்தியில் அமையும் ஆட்சி தான் நம் நாட்டு நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த முடியும். நான் இந்த ஒரு மாத இடைவெளியில் இந்தியாவிலுள்ள பல மாநிலங்களை சுற்றி வந்தேன். எனக்கு ஒன்று நேரிடையாக, தெளிவாக தெரிந்தது. இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் எந்த கூட்டணிக்கு எவ்வளவு சீட் கிடைக்கப் போகிறதோ எனக்கு தெரியாது.

ஆனால், இந்த தேர்தலில் மத்தியில் அமரப் போவது வாஜ்பாய் தலைமையிலான என்.டி.ஏ., அரசுதான். இது உறுதி. என்னைப் பொறுத்தவரையில், இந்திய நாட்டின் முக்கியப் பிரச்னையான தண்ணீர் பிரச்னைக்கு யார் தீர்வு காண்கிறார்களோ அவர்களுக்கே என் ஓட்டு. நதிகளை இணைக்கும் திட்டத்தில் மற்றவர்கள் ஒரு உறுதியான முடிவுக்கு வராத இந்த நேரத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பாக வாஜ்பாய் தலைமையிலான என்.டி.ஏ., அரசின் தேர்தல் அறிக்கையில் தண்ணீர் பஞ்சத்தை தீர்ப்பதற்காக இந்திய நாட்டின் அனைத்து நதிகளையும் கண்டிப்பாக இணைப்போம் என்று உறுதியாக சொல்லியிருக்கிறார்கள்.

திரு.அத்வானி அவர்களே, அதை செயல்படுத்தியே தீருவோம் என்று என்னிடம் உறுதி அளித்திருக்கிறார்கள். வாஜ்பாய் அரசு அதை செய்யும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆக, இந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வாஜ்பாய் தலைமையிலான பி.ஜே.பி., கூட்டணிக்குதான் என் ஓட்டு.

தமிழக மக்களே, அன்பான ரசிகர்களே, மறுபடியும் சொல்கிறேன். இது எந்த கூட்டணிக்கும் என் ஆதரவு அல்ல. இது என் ஓட்டு மட்டும்தான். இதற்காக தமிழக மக்களையோ, என் ரசிகர்களையோ நான் ஓட்டு போடும் கூட்டணிக்குத்தான் ஓட்டு போட வேண்டும் என்று நான் வற்புறுத்த மாட்டேன். நான் இந்த கூட்டணிக்கு ஓட்டு போடுவதாலே என் ரசிகர்களும், இந்த கூட்டணிக்குத்தான் ஓட்டு போட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நீங்கள் பல கட்சிகளில் இருக்கிறீர்கள். உங்களின் ஓட்டு உரிமையை நான் பறிக்க மாட்டேன்.

ஆனால், சிந்தியுங்கள். தமிழ்நாட்டிலுள்ளவர்கள் மட்டுமல்ல இந்தியாவில் வாழும் அனைத்து மக்களே குறிப்பாக தாய்மார்களே, இளைஞர்களே, மாணவ, மாணவிகளே, படித்தவர்களே நீங்கள் ஓட்டுச் சாவடிக்கு ஓட்டு போட போகும்போது நம் கட்சி ஆளு ஜெயிக்கணும்ன்னு ஓட்டு போட போறீங்களா, இல்லை நம்ம ஜாதி ஆளு ஜெயிக்கணும்ன்னு ஓட்டு போட போறீங்களா, இல்லை தண்ணீ வேணும்ன்னு ஓட்டு போட போறீங்களா? என்று முடிவு பண்ணுங்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில். சிந்தியுங்கள், செயல்படுங்கள்.

வாழ்க தமிழக மக்கள்! வளர்க தமிழ்நாடு! நதிகள் இணையட்டும்! இந்தியா ஒளிரட்டும்! ஜெய்ஹிந்த்.

இவ்வாறு ரஜினிகாந்த் தம்முடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் 2004 லோக்சபா தேர்தலில் ரஜினி என்னதான் பாஜகவுக்கு ஓட்டுப் போட்டு பாமகவுக்கு எதிராக வாய்ஸ் கொடுத்தாலும் மக்கள் அதை நிராகரித்துவிட்டனர். திமுக கூட்டணி 39 தொகுதிகளையும் கைப்பற்றியது. பாமக 5 தொகுதிகளில் வென்றது. மத்தியில் ரஜினிகாந்த் நினைத்தபடி பாஜக அரசு அமையவில்லை. 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகாலம் காங்கிரஸ்தான் மத்தியில் தொடர்ந்து ஆண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+