துபாய்-கோலாலம்பூர் விமான பயணிக்கு நெஞ்சு வலி.. சென்னையில் அவசர தரையிறக்கம்
சென்னை: துபாயில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு சென்ற எமிரேட்ஸ் விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக சென்னையில் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின், EK346 என்ற விமானம், 115 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் கோலாலம்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்தது.

விமானம் இந்திய வான் எல்லையில் பறந்து கொண்டிருந்த நிலையில், 61 வயது பயணி ஒருவருக்கு திடீரென கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இத்தகவல் பைலட்டுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விமானத்தை அவசரமாக தரையிறக்க கேட்டு விமான கட்டுப்பாட்டு ஆணையத்தை தொடர்புகொண்டார் பைலட்.
சென்னை விமான நிலையத்தில் தரையிறக்குமாறு பதில் வந்ததும், அவசரமாக சென்னை சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. விமான நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு, அந்த பயணி மேல் சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறிய தாமதத்திற்கு பிறகு விமானம் கோலாலம்பூர் கிளம்பி சென்றது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications