பெங்களூர் செல்ல ஸ்டாலினுக்கு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்து தர ரெடி: பொன்.ராதாகிருஷ்ணன்
Recommended Video

சென்னை: மு.க.ஸ்டாலினுக்கும், திருநாவுக்கரசருக்கும் பெங்களூர் செல்ல சிறப்பு விமானம் ஏற்பாடு செய்து தர தயார் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களை சந்தித்தார். அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து, குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள்.
தமிழகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்காக பிரதமர் மோடியின் அரசு கவனம் செலுத்துகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் பெங்களூர் சென்று கர்நாடக முதல்வரிடம் பேசி சம்மதம் பெறவேண்டும். தமிழக அரசின் சார்பில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை பெங்களூருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் முன் வைக்கிறேன்.
கர்நாடகாவுக்கு சென்று முதல்வரிடம் பேச மு.க.ஸ்டாலின் மற்றும் திருநாவுக்கரசருக்காக சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்து தருகிறோம். அவர்கள் செல்ல தயாரா என்று தெரிவிக்க வேண்டும். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!











Click it and Unblock the Notifications