வேடசந்தூர் அருகே விமானம் மூலம் மலைகளில் ஆய்வு.. திடீர் திடீரென வட்டமிடும் விமானங்களால் மக்கள் பீதி
திண்டுக்கல் அருகே கனிமவளங்களை வெட்டி எடுப்பதற்காக விமானங்கள் மூலம் மலைப்பகுதிகள் ஆய்வு செய்யப்படுகின்றன.
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கனிமவளங்களை வெட்டி எடுப்பதற்காக விமானங்கள் மூலம் மலைப்பகுதிகள் ஆய்வு செய்யப்படுகின்றன. திடீர் திடீரென விமானங்கள் மலைப்பகுதியை சுற்றி வட்டமடிப்பதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
திண்டுக்கல் - கரூர் மாவட்ட எல்லையில் உள்ள கருமலை, ரெங்கமலை பகுதிகளில் செம்பு, காரீயம், துத்தநாகம் உள்ளிட்ட கனிமவளங்கள் இருப்பதாக கூறி கடந்த சில மாதங்களாக மத்திய அரசின் நில அறிவியல்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இதற்காக 3 ஆயிரம் அடிக்கு மேல் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை உடனடியாக தடுத்து நிறுத்தக் கோரி கிராம மக்கள் மாவட்டட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
இன்று 50 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது இத்திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிடாவிட்டால் உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டு எச்சரிக்கையும் விடப்பட்டது.
ஆனால் கனிமவளங்களை வெட்டி எடுக்கும் பணி அடுத்த கட்டத்தை எட்டியுள்ளார். கருமலை மற்றும் ரெங்கமலையில் விமானம் மூலம் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
கனிமவளங்களை வெட்டி எடுப்பதில் மத்திய அரசு படுதீவிரமாக ஈடுபட்டுள்ளது.
திடீர் திடீரென வந்து வட்டமிடும் விமானங்களால் பொதுமக்கள் கடும் பீதியடைந்துள்ளனர். பொதுமக்களின் எதிர்ப்பை மீறி கனிமவளங்களை எடுப்பதில் மத்திய அரசு மும்முரமாக இறங்கியுள்ளதால் அங்கும் நெடுவாசல் போன்ற போராட்டம் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications