களை கட்டும் குற்றால சீசன்... வேகமாக நிரம்பும் படகு குழாம்... விரைவில் படகு சவாரி துவக்கம்!
குற்றாலம்: குற்றாலத்தில் அருவிகளில் தண்ணீர் விழுவதால், நாளுக்கு நாள் அங்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிதது வருகிறது. இந்த நிலையில் சில நாட்களில் படகு சவாரியும் தொடங்க இருப்பதால் சுற்றுலா பயணிகள் உற்சாகத்தில் உள்ளனர்.
இந்தாண்டு ஆரம்பத்தில் அருவிகளில் தண்ணீர் வரத்து இன்றி வறண்டுக் காணப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வியாபாரிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால், கடந்த சில நாட்களாக குற்றாலத்தில் மெயின் அருவி, பழைய குறறால அருவி, ஐநதருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது.
இதனால் சீசன் களை கட்டியுள்ளது.

புதிய பூங்கா...
குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் பொழுது போக்குவதற்காக, ஐந்தருவி செல்லும் சாலையில் புதிய பூங்காவும் திறக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு படகு சவாரியும் உண்டு.

படகு குழாம்...
இந்தாண்டு சீசன் தாமதமாக துவங்கியதால் படகு குழாமில் தண்ணீர் நிரம்புவதால் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் ஐந்தருவியில் மாலை திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் படகு குழாமில் தண்ணீர் வரத்து அதிகரி்த்தது.

தண்ணீர்...
இரண்டாவது படி வரை தண்ணீர் நிரம்பி விட்ட நிலையில் இன்னும் சிறிதளவு மட்டுமே நிரம்ப வேண்டி உள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் விரைவில் படகு குழாம் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேதமடைந்த படகுகள்...
கடந்த ஆண்டு மொத்தம் 36 படகுகள் இருந்த நிலையில் இந்தாணடு கூடுதலாக 10 படகுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் சில படகுகள் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் இந்தாண்டு 31 படகுகள் மட்டுமே இயக்கப்படும் என சுற்றுலா துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

படகு வகைகள்...
இவற்றில் இரண்டு இருக்கை பெடல் படகுகள், நான்கு இருக்கை பெடல் படகுகள், நான்கு இருக்கை துடுப்பு படகுகள், தனி பைபர் துடுப்பு படகுகள் போன்றவை அடங்கும்.

இன்னும் சில தினங்களில்...
தண்ணீர் விரைவாக நிரம்பி வரும் நிலையில் இன்னும் ஓரிரு தினங்களில் படகு சவாரி துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகத்தில் உள்ளனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications