அக்டோபரில் முதல்முறையாக மீனாட்சி அம்மன் கோவிலில் புகுந்த வெள்ளநீர்.. இப்போது தீ.. பீதியில் மக்கள்!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்து மக்களிடம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்து மக்களிடம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தமிழகத்தில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களின் மூலக் கோயிலாக உள்ளது. இந்தக் கோயிலின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன்.
இத்தலத்தில் முதல் பூசை அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகிறது. சுந்தரேஸ்வரர் கோவில் புதனுக்குரிய ஸ்தலமாகவும் பார்க்கப்படுகிறது.

அரசுடன் தொடர்பு..
புதன் ஆட்சிக்குரியவர் என்பதால் இக்கோயில் அரசு மற்றும் அரசாள்பவர்களுடன் தொடர்புபடுத்தி பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்தக்கோவிலில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட கடைகள் தீக்கிரையாயின.

ஆயிரங்கால் மண்டபம்
ஆயிரங்கால் மண்டபத்தின் தூண்கள் மற்றும் மேற்கூரை சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.

இதுபோன்ற அசம்பாவிதம்..
கண்ணகி மதுரையை எரித்தப்பிறகு இப்போதுதான் கோவிலில் இதுபோன்ற தீ விபத்து அசம்பாவிதம் நடைபெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளநீர் புகுந்ததில்லை
கடந்த அக்டோபர் மாதத்தில் மதுரையில் கொட்டிய பலத்த மழையால் தீ விபத்து ஏற்பட்ட இதே பகுதியில் வெள்ளநீர் புகுந்தது. இதுவரை கோவிலுக்குள் இப்படி வெள்ள நீர் புகுந்ததில்லை என்று கூறிய மக்கள் இவ்வளவு நீரை கோவிலுக்குள் பார்த்ததில்லை என்றும் சாமி குத்தம் ஏதும் உள்ளதோ என்றும் அச்சமடைந்தனர்.

எதற்கான அறிகுறியோ..
வெள்ளநீர் புகுந்து 3 மாதங்கள் கடந்த நிலையில் தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற தீ விபத்து எப்போதும் ஏற்பட்டதில்லை என்று கூறியுள்ள மக்கள் இது எதற்கான அறிகுறியோ என்றும் அச்சம் தெரிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications