வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக வங்கிக் கணக்கு தொடங்க ஏற்பாடு
சென்னை: தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக வங்கிக் கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒருமாதமாக விடாது பெய்த கனமழைக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன. 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கொட்டித் தீர்த்த மழைக்கு சென்னை நகரமே வெள்ளக் காடாகியது. எங்கு பார்த்தாலும் மழைநீர் வெள்ளம் என மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் முடக்கியது. கடலூரிலும் மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த கோரதாண்டவத்தில் பலரது வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ஏராளமான வீடுகளில் வெள்ள நீர் புகுந்து பொருட்களை எல்லாம் சூறையாடிச் சென்றது.

இந்நிலையில் தமிழகத்தில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக வங்கிக்கணக்கு துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில வங்கியாளர்கள் குழுமம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வங்கி பாஸ் புத்தகம் மற்றும் ஏ.டி.எம்.,கார்டு ஆகியவற்றை இழந்தவர்கள் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிக்கிளையை அணுகி புதிதாக புத்தகம் பெற்றுக்கொள்ளலாம்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில், வங்கிக்கணக்கு இல்லாதவர்கள் அருகில் உள்ள வங்கி கிளையில் 2 போட்டோ மற்றும் அடையாள அட்டையுடன் அணுகி பிரதமரின் மக்கள் நிதித் திட்டத்தின் கீழ் புதிய வங்கிக் கணக்கு துவங்கலாம் என கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications