மதுரை அருகே ஆம்னி பேருந்தில் எடுத்து செல்லப்பட்ட ரூ50 லட்சம் பணம் பறிமுதல்!
மதுரை: தனியார் ஆம்னி பேருந்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட 50 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 16ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கும் வகையில் தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் இதுவரை 60 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 3 கிலோ தங்க நகைக்கள், வெள்ளிக்கொலுசுகள், மூக்குத்திகள், பரிசுப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே மதுரை மாவட்டம் மேலூர் அருகே சிட்டம்பட்டி சுங்கச்சாவடி பகுதியில், தேர்தல் பறக்கும்படை அலுவலர் வெங்கடேசன், பக்கீர் முகமது தலைமையிலான போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சென்னையில் இருந்து ஆம்னி பேருந்தை நிறுத்தி சோதனை செய்யப்பட்டது. இதில் மதுரையை சேர்ந்த ராதா என்பவர் உரிய ஆவணம் இல்லாமல் 50 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை கருவூலத்தில் ஒப்படைத்தனர். ஆவணங்களின்றி பணத்தை கொண்டு சென்ற ராதாவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications