வாணியம்பாடியில் வாக்காளர்களுக்கு பணம்! பறக்கும் படையை பார்த்ததும் தெறித்து ஓடிய மர்மநபர்கள்
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே இருவேறு இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த நபர்கள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை கண்டவுடன் பணத்தை வீசிவிட்டு தப்பி ஓடியதை அடுத்து, அங்கிருந்த ரூ 2.38 லட்சம் மதிப்புள்ள பணத்தை மீட்ட பறக்கும் படை அதிகாரிகள், அதை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த அழிஞ்சிகுளம் மற்றும் பெத்தவேப்பம்பட்டு பகுதிகளில் ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

அப்போது அப்பகுதிகளில் வாக்காளர் பட்டியலை வைத்துக் கொண்டு, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து கொண்டிருந்தவர்கள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை கண்டதும் பணம் மற்றும் வாக்காளர் பட்டியல்களை தூக்கி வீசிவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இதனை தொடர்ந்து தூக்கி வீசப்பட்ட 2 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் பணத்தை மீட்டு தேர்தல் பறக்கும் படையினர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து அப்பணத்தை வாணியம்பாடி சார் நிலை கருவூலத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அந்த மர்ம நபர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த வாரம் அதாவது ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் தேதி அறிவித்த நாள் முதல் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துவிட்டன.
இதனால் யாரும் எந்த வித ஆவணங்களும் இன்றி ரூ 50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு செல்லக் கூடாது என்பது தேர்தல் நடத்தையில் ஒன்றாகும். இது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தவிர்ப்பதற்காக கொண்டு வந்த விதியாகும்.
ரூ 50 ஆயிரத்திற்குள் பணம் கொண்டு செல்லலாம். அதற்கு மேல் கொண்டு போய் ஆவணங்கள் இல்லாவிட்டால் அது தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படும். ஒரு வேளை ரூ 10 லட்சத்திற்கு மேல் யாராவது பணம் கொண்டு சென்றால் அந்த வழக்கை வருமான வரித் துறை விசாரிக்கும்.
அந்த வகையில் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத வகையில் நாடு முழுவதும் அதிக அளவிலான பணம், தங்கம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. அதிக அளவில் பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வகையில், முதல் இடத்தில் ராஜஸ்தான் (ரூ.778.52 கோடி), 2-ம் இடத்தில் குஜராத் (ரூ.605.33 கோடி) ஆகிய மாநிலங்களை தொடர்ந்து, தமிழகம் ரூ.460.84 கோடியுடன் 3-வது இடத்தில் உள்ளது.
சி-விஜில் செயலி மூலம், பணம், இலவச பொருள் விநியோகம் குறித்து 3,262 புகார்கள் பெறப்பட்டுள்ளன. தேர்தல் நேர்மையாக நடைபெற தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆயினும் இது போன்ற பணம் விநியோகம் நடத்தப்பட்டுத்தான் வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications