ஜெ.வுக்காக சிவன், பார்வதி, காளி வேடங்களில் நாளை கூட்டுப் பிரார்த்தனை.... தேவா தலைமையில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலை பெறுவதற்காக சென்னையில் நாளை தமிழ்நாடு மாநில கிராமியக் கலைஞர்கள் மற்றும் கலைத் தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடவுள் வேடம் அணிந்து கூட்டுப் பிரார்த்தனை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மாநில கிராமிய கலைஞர்கள் மற்றும் கலைத் தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் கலைமாமணி பி.சோமசுந்தரம் விடுத்துள்ள அறிக்கையில்,

Folk artistes to perform prayer for Jaya

புரட்சி தலைவி அம்மா அவர்கள் எல்லா வழக்குகளில் இருந்தும் மீண் வர வேண்டும் என்பதற்காக எங்கள் அமைப்பை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட கலைஞர்கள் கூட்டு பிரார்த்தனை செய்ய உள்ளோம்.

சிவன், பார்வதி, முருகன், விநாயகர், காளி உட்பட பல வேடங்களில் கூட்டு பிரார்தனை நடைபெற உள்ளது.

அத்துடன் கிராமிய கலைஞர்களான, கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் சம்மந்தப்பட்ட கலைஞர்கள் அந்த உடையலங்காரத்துடன் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபடுகின்றனர்.

இந்த பிரார்த்தனையில் தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றத் தலைவர் தேனிசைத் தென்றல் தேவா தலைமையில் செயலாளர் சித்ரா விஸ்வேஸ்வரன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

இந்த கூட்டு பிரார்த்தனை 07.10 . 2014 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெற உள்ளது. இதில் கலைமாமணி விருது பெற்ற பல கலைஞர்கள் பங்கு பெறுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+