விவசாயிகளுக்காக சிவகங்கையில் உணவுப் பதப்படுத்தும் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்: ஜெ. உத்தரவு

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
உணவுப் பொருட்களை பதப்படுத்தும் தொழிலை ஊக்குவிப்பதன் மூலம் விவசாயிகளின் வருமானம் உயர்வதற்கு வழிவகை ஏற்படுகிறது. இதற்காக விவசாயிகளுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
இதனைக் கருத்தில் கொண்டு, சிவகங்கை மாவட்டம், செட்டிநாடு, மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மூலம் உணவுப் பதப்படுத்தும் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தை தொடங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த பயிற்சி நிறுவனத்திற்கென கட்டிடம் கட்டுவதற்கும் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்கும் 49 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த பயிற்சி நிலையத்தில் காய்கறிகள் மற்றும் பழங்களை தரம் பிரித்தல், பாதுகாப்பாக கையாளுதல், சிப்பமிடுதல் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல், உணவுப் பதப்படுத்தலில் இயந்திரங்களை பயன்படுத்துவதன் மூலம் வேலைப் பளுவை குறைத்தல், விவசாய கழிவுகளிலிருந்து மதிப்பு கூட்டப்பட்டப் பொருட்களை தயாரித்தல், கால்நடை தீவனம், எரிபொருள் போன்றவைகளை உற்பத்தி செய்வது போன்ற நடைமுறைகளை பண்ணை அல்லது கிராம அளவில் செயல்படுத்த பயிற்சி அளித்தல், மருத்துவ குணமுள்ள உணவு மற்றும் செறிவூட்டப்பட்ட பொருட்களின் உற்பத்தியைப் பெருக்குதல், மேம்படுத்தப்பட்ட சிப்பமிடுதல் முறைகளினால் பொருட்களின் சேமிப்புக் காலத்தை நீட்டித்தல், எதிர்கால பயன்பாட்டிற்கும் உலகச் சந்தைப்படுத்தலுக்கு பயன்படும் வகையிலும் உணவு பதனிடுதலையும், மதிப்பு கூட்டப்பட்ட உணவுகள் தயாரித்தல் பற்றிய விழிப்புணர்வை விவசாயிகளுக்கு ஏற்படுத்துதல், விவசாயிகள், தொழில் முனைவோர், சிறு தொழில் முனைவோர், சுய உதவிக் குழுக்கள் மற்றும் பள்ளியிலிருந்து இடையில் நின்றவர்கள் ஆகியோருக்கு பயிற்சி மற்றும் தொழில் நுட்ப ஆலோசனைகள் வழங்கல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் கிராமப்புறங்களில் புதிய சுயதொழ ல் வளர்ச்சிக்கு நல்ல வாய்ப்பாக அமையும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications