லஞ்ச ஊழல் வழக்கு: கோவை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராதாகிருஷ்ணனுக்கு 5 ஆண்டு சிறை
லஞ்ச ஊழல் வழக்கில் கைதான கோவை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராதாகிருஷ்ணனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை : வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கோவை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராதாகிருஷ்ணனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தராக இருந்த ராதாகிருஷ்ணன், 2008-2009ம் ஆண்டு, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மேஜை, நாற்காலி வாங்கியதில் ஊழல் செய்ததாக வருமான வரித்துறையினரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்து வந்த கோவை லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு நீதிமன்ற நீதிபதி மதுரசேகரன், ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து, ராதாகிருஷ்ணனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், அபராதமாக ரூ.1 லட்சமும் செலுத்துமாறு தீர்ப்பளித்துள்ளார்.
கோவை அண்ணா பல்கலைக்கழகம், மேட்டுப்பாளையம் சாலையில் ஜோதிபுரம் பகுதியில் கடந்த 2007ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை இயங்கி வந்தது. அப்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக இருந்தவர் ராதாகிருஷ்ணன். அப்போது பல்கலைக்கழக வகுப்பறைகளுக்கு மேஜை, நாற்காலி வாங்க ஒப்புதல் அளிக்க ரூ.40 ஆயிரம் லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசில் ராதாகிருஷ்ணன் மீது புகார் கூறப்பட்டது.
துணை வேந்தர் மீதான புகார் என்பதால் இவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த கவர்னரிடம் அனுமதி பெறப்பட்டு, ராதாகிருஷ்ணன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதன் பின்னர் கோவையில் உள்ள அவருடைய வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ராதாகிருஷ்ணனும், அவருடைய மனைவி அமிர்த சஞ்சீவியும் சொத்து வாங்கி குவித்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அவர் மீது சொத்துக்குவிப்பு வழக்கை லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்தனர். இந்த 2 வழக்குகள் தொடர்பாக ராதாகிருஷ்ணன், அமிர்தசஞ்சீவி ஆகியோர் மீது 2013ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கோவை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி மதுரசேகரன், ஊழல் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் துணைவேந்தர் ராதாகிருஷ்ணனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
Former Anna University vice chancellor R Radhakrishnan was sentenced to five years imprisonment by a special court in Coimbatore for accepting bribe of Rs 40000 from a contractor in 2008.
60 words
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கோவை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராதாகிருஷ்ணனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவையில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தராக இருந்த ராதாகிருஷ்ணன், 2008-2009ம் ஆண்டு, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மேஜை, நாற்காலி வாங்கியதில் ஊழல் செய்ததாக வருமான வரித்துறையினரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications