முன்னாள் திமுக அமைச்சர் கே.பி.பி.சாமி மகன் தற்கொலை
சென்னை: முன்னாள் திமுக அமைச்சர் கே.பி.பி.சாமியின் மகன் இனியவன் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை திருவொற்றியூர் கே.பி.கே. குப்பத்தில் வசித்து வருகிறார் சாமி. இவர் சமீபத்தில் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவரது மனைவி உமா மாரடைப்பால் மரணமடைந்தார்.

தற்போது தி.மு.க. மீனவர் அணி மாநில செயலாளராக உள்ள சாமி, ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக அங்கு சென்றுள்ளார்.
வீட்டில் கே.பி.பி.சாமியின் மகன் இனியவன் (28), அவரது மனைவி பிரஜன்யா (23), மகள் இனியா (1) ஆகியோர் இருந்தனர். நேற்று இரவு இனியவன் மாடியில் தூங்க சென்றார். பிரஜன்யா, குழந்தையுடன் வீட்டின் கீழ் பகுதியில் தூங்கினார்.
இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் இனியவன் கீழே வரவில்லை. எனவே பிரஜன்யா மாடிக்கு சென்று பார்த்தார். அறை கதவை தட்டியும் திறக்கவில்லை. ஜன்னல் வழியாக பார்த்தபோது இனியவன் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார்.
இது குறித்து உடனடியாக போலீசாருக்குத் தகவல் தரப்பட்டது. திருவொற்றியூர் போலீஸார் உடலை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இனியவன் தற்கொலை குறித்து அறிந்த கே.பி.பி.சாமிக்கு உடனே ஸ்ரீரங்கத்தில் இருந்து சென்னை திரும்பினார். உடல்நிலை சரியில்லாததால் இனியவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.
சாமியின் மகள் உதயா ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். சாமிக்கு பரசுபிரபாகரன் என்ற இன்னொரு மகனும் உள்ளார்.
கே.பி.பி. சாமியின் தந்தையும் திமுகவின் மிகத் தீவிரமாக பணியாற்றியவர் ஆவார். கடந்த திமுக ஆட்சியில் சாமி மீன்வளத்துறை அமைச்சராக இருந்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications